
சமீப காலமாக உலகெங்கிலும் 'கொரியன் பியூட்டி டிப்ஸ்' ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, கண்ணாடி போன்ற பளபளப்பான தோற்றத்தை பெற, கொரியன் மாஸ்க்குகள் பெரும் உதவியாக உள்ளன.
வயதான தோற்றத்தை குறைப்பது, சருமத்தை பிரகாசமாக்குவது மற்றும் இயற்கை வைட்டமின் சி சத்துகளை வழங்குவது போன்ற பலன்களை பெறுவதற்காக இந்த மாஸ்க்குகள் தயாரிக்கப்படுகின்றன. அத்தகைய பலன்களை தரும் ஒரு கொரியன் ஃபேஸ் மாஸ்க்கை, உங்கள் வீட்டிலேயே எளிதாக தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்.
இந்த மாஸ்க் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் அனைத்தும் சமையலறையில் இருப்பவை தான். அதன்படி, வெள்ளை அரிசி கால் கப், பால் 1 கப், தண்ணீர் அரை கப், தேன் 1 டேபிள்ஸ்பூன், ரைஸ் பேப்பர் ஷீட் (Rice Paper Sheet) 1 ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ரைஸ் பேப்பர் ஷீட்டை கடைகளில் இருந்து எளிதாக வாங்கிக் கொள்ளலாம்.

மேலும் படிக்க: கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் பால்: கூடுதல் நன்மைகளை பெற நீங்கள் பின்பற்ற வேண்டிய எளிய வழிகள்
முதலில், எடுத்து வைத்திருக்கும் அரிசியை குளிர்ந்த நீரில் நன்கு கழுவ வேண்டும். அரிசியில் உள்ள தூசு, மாவு போன்ற அசுத்தங்கள் நீங்கும் வரை சல்லடை பயன்படுத்தி வடிகட்டி சுத்தம் செய்யவும். சுத்தம் செய்த அரிசியை ஒரு நான்-ஸ்டிக் (Non stick) பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் தண்ணீர் மற்றும் பாலை சேர்க்கவும். இந்த மூன்றையும் ஒன்றாக வைத்து, மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைக்கவும். இது கொதிக்கத் தொடங்கியதும், நெருப்பின் அளவைக் குறைத்து விடலாம்.
மேலும் படிக்க: சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டுமா? இந்த 5 பழக்கங்களை தினசரி கடைபிடிக்கவும்
அரிசி முழுவதுமாக மென்மையாகும் வரை காத்திருக்க வேண்டும். இதற்கு சுமார் 25 முதல் 30 நிமிடங்கள் ஆகலாம். இந்த நேரத்தில், அடிப்பிடிக்காமல் இருக்க கலவையை மெதுவாக கிளறிக் கொண்டே இருப்பது அவசியம். அரிசி வெந்த பிறகு, அடுப்பில் இருந்து எடுத்து ஆற விடவும். இந்தக் கலவையை மிக்ஸியில் சேர்த்து பசை பதத்திற்கு அரைக்க வேண்டும். நீங்கள் அரைத்த பசை மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிதளவு பால் அல்லது தண்ணீர் சேர்த்து கலவையை சரிசெய்யலாம். மாஸ்க்கை முகத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற சரியான பதத்திற்கு இதைக் கொண்டு வர வேண்டும். மிகவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது; மிகவும் நீர்த்த நிலையிலும் இருக்கக் கூடாது. கடைசியாக, இந்த மாஸ்குடன் 1 டேபிள்ஸ்பூன் தேனை சேர்க்கவும். இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும்.

தேனை நன்கு கலந்த பிறகு, இதனை ஒரு காற்று நுழையாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் சேமித்து வைக்கலாம். வாரத்திற்கு ஓரிரு முறை இதை உபயோகிப்பதன் மூலம் உங்கள் சருமத்தை கண்ணாடி போன்று பளபளப்பாக மாற்றலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com