
Skin care tips: இயற்கையான முறையில் சருமத்தை பராமரிப்பதன் மூலம் ஒவ்வாமை அல்லது பக்கவிளைவுகளில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும். இதில் பீட்ரூட் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன்படி, பீட்ரூட்டை கொண்டு ஐஸ் கட்டிகள் தயாரித்து, அவற்றை எப்படி சருமத்திற்கு பயன்படுத்தலாம் என்று காண்போம்.
பீட்ரூட் ஐஸ் கட்டிள் மூலம் கிடைக்கும் நன்மைகள்:
பீட்ரூட் ஐஸ் கட்டிகள் என்பது எளிமையான மற்றும் ஆற்றல் மிகுந்த சரும பராமரிப்பு முறை ஆகும். இது செலவு மிகுந்ததோ அல்லது அரிதானதோ அல்ல. வெயிலின் மூலம் ஏற்படும் எரிச்சலை தணிக்கவும், அரிப்பை குறைக்கவும், எண்ணெய் பசையுள்ள சருமத்தை சமநிலைப்படுத்தவும் இது பயன்படுகிறது. பியூட்டி பார்லரில் பெறுவது போன்ற புத்துணர்ச்சியை தினமும் வீட்டிலேயே பெற இந்த எளிய இயற்கையான நடைமுறை உதவும்.
பீட்ரூட் உங்களுக்கு பளபளப்பான மற்றும் பருக்கள் இல்லாத சருமத்தை வழங்க உதவுகிறது. இது நம் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும். இந்த பீட்ரூட் ஐஸ் கட்டிகளை பயன்படுத்தி, நாள் முழுவதும் நீடிக்கும் பிரகாசத்தை பெறலாம். இது எண்ணெய் பசை சருமம் மற்றும் பருக்கள் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றதாக அமையும்.

மேலும் படிக்க: முடி வளர்ச்சிக்கு கடுகு எண்ணெய்; அடர்த்தியான கூந்தலை பெற இதை ட்ரை பண்ணுங்க
பீட்ரூட்டில் உள்ள அன்டிபாக்டீரியல் பண்புகள் சரும தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தி, மந்தமான மற்றும் வறண்ட சருமத்திற்கு புத்துயிர் அளிக்கின்றன. இதில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், பருக்களை குறைக்க உதவுகிறது. மேலும், சரும அமைப்பை மேம்படுத்தவும் இது பயன்படுகிறது. மென்மையான மற்றும் தெளிவான சருமத்தை இது அளிக்கிறது.
மேலும் படிக்க: முடி உதிர்வை தடுத்து ஆரோக்கியமாக பராமரிக்க உதவும் தேன்; கூந்தல் பராமரிப்பில் இப்படி யூஸ் பண்ணுங்க
பீட்ரூட் மற்றும் கேரட் ஆகியவை பருக்களை குறைக்க உதவுவதால் இவை மிக சிறந்த பலனைத் தரும். முதலில், பீட்ரூட் மற்றும் கேரட் இரண்டையும் தோலுரித்து, துருவிக் கொள்ளவும். அவற்றை மிக்சியில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். இந்த சாறை வடிகட்டி தனியாக வைக்கவும். இதற்கடுத்து, ஐஸ் டிரேயில் இதனை ஊற்றி உறைய வைக்கவும். இவ்வாறு செய்தால் நமக்கு தேவையான பொருள் தயாராகி விடும். தினமும் படுக்கைக்கு செல்லும் முன் இந்த ஐஸ் கட்டிகளை முகம் மற்றும் கழுத்தில் மெதுவாக தேய்க்கலாம். இது நல்ல பலனை கொடுக்கும்.

இது மட்டுமின்றி மற்றொரு முறையும் இருக்கிறது. இதற்காக, பீட்ரூட்டின் தோலை நீக்கி துருவவும். பின்னர், மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும். இந்த சாறை வடிகட்டி அத்துடன் 3 தேக்கரண்டி முல்தானி மட்டியை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்தக் கலவையை ஐஸ் டிரேயில் ஊற்றி உறைய வைக்கவும். இதை முகம் மற்றும் கழுத்தில் தேய்க்கலாம். இதுவும் நமது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
தினமும் இந்த இயற்கையான பராமரிப்பை பின்பற்றுவதன் மூலம் செலவில்லாமல் வீட்டிலேயே பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பெறலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com