மொறு மொறுப்பான பிரெஞ்சு ப்ரைஸின் ரகசியம் இது தான்!

உலகின் மிகப் பிரபலமான உணவுகளில் பிரெஞ்ச் ப்ரைஸும் ஒன்று. இதை மொறுமொறுப்பாக சரியான பக்குவத்தில் செய்வதற்கான முறையை இப்பதிவை பார்க்கலாம்…

french fries recipe

வீட்டில் எப்போது பிரெஞ்ச் ப்ரைஸ் செய்தாலும் அது கடைகளில் கிடைப்பது போல் மொறு மொறுப்பாக இல்லை என நினைக்கிறீர்களா? பிரெஞ்ச் ப்ரைஸ் மொறுகளாக வர ஒரு சில விஷயங்களை தவறாமல் செய்ய வேண்டும். பல பிரபல உணவகங்களில் கிடைக்கும் பிரெஞ்ச் ப்ரைஸ்களுக்கு நிகரான சுவையில் இனி நீங்களும் வீட்டிலேயே பிரெஞ்ச் ப்ரைஸ் செய்யலாம்.

சரியான உருளைக்கிழங்கை தேர்ந்தெடுப்பது முதல் பொரிப்பது வரை, இதில் உள்ள ரகசியங்களை உங்களுடன் பகிர்ந்துள்ளோம். ஒரு சில உணவகங்களில் ஒரு முறை பயன்படுத்தி எண்ணெயை மீண்டும் மீண்டும் பொரிப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் எண்ணெயை சூடாக்கினால் அது உடலுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். இந்நிலையில் வீட்டில் இருக்கும் சுத்தமான எண்ணெயை பயன்படுத்தி குழந்தைகளுக்கு பிரெஞ்ச் ப்ரைஸ் செய்து கொடுக்கலாம். இதற்கான செய்முறையை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

potatoes for french fries

  • உருளைக்கிழங்கு - 4
  • குளிர்ந்த நீர் - உருளைக்கிழங்கை அலசுவதற்கு
  • எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
  • உப்பு - ½ டீஸ்பூன்
  • மிளகாய் பொடி - ½ டீஸ்பூன்

செய்முறை

restaurant style french fries

  • பிரெஞ்ச் ப்ரைஸ் செய்வதற்கு பெரிய மற்றும் நீளமான உருளைக்கிழங்கை தேர்வு செய்து கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கை கழுவி சுத்தம் செய்து தோலை நீக்கி கொள்ளவும். இதனை ஒரு சென்டிமீட்டர் தடிமனில் நீள குச்சிகளாக நறுக்கி கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கு துண்டுகளில் உள்ள மாவுச்சத்து முழுவதும் நீங்கும் வரை குளிர்ந்த நீரில் அலசி எடுக்கவும்.
  • அலசிய உருளைக்கிழங்கை ஒரு காட்டன் துண்டு அல்லது டிஷ்யூ பேப்பரின் மீது பரப்பி வைத்து உலர விடவும்.
  • உருளைக்கிழங்கின் ஈரப்பதம் நீங்கியவுடன் இதனை பொறித்தெடுக்கலாம்.
  • எண்ணெயை சூடாக்கி உலர வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து பொரித்தெடுக்கவும்.
  • இதை சுமார் 6 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் வைத்து பொரித்தெடுக்கவும். லேசாக நிறம் மாறும் சமயத்தில் எண்ணெயில் இருந்து வடித்து எடுத்துக் கொள்ளவும்.
  • இவை முழுவதும் ஆற வேண்டும். நீங்கள் விரும்பினால் இந்த பொரித்த உருளைக்கிழங்கு துண்டுகளை பிரீஸரில் 1-2 மணி நேரம் வைக்கலாம்.
  • இவ்வாறு குளிர்விக்கப்பட்ட உருளைக்கிழங்கை மீண்டும் ஒருமுறை சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். இவ்வாறு செய்வதால் பிரெஞ்ச் ப்ரைஸ் நல்ல மொறு மொறுப்பாக வரும்.

இந்த செய்முறையை பின்பற்றி நீங்களும் உங்கள் வீட்டில் நல்ல மொறு மொறுப்பான பிரெஞ்ச் ப்ரைஸ் செய்து ருசியங்கள்.

இந்த பதிவும் உதவலாம்: வீட்டிலேயே ஆரோக்கியமான புரோட்டின் பவுடர் செய்வது எப்படி?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP