Perfect Poori : பூரி எண்ணெய் குடிக்காமல் நல்ல புசுபுசுன்னு வர சூப்பர் டிப்ஸ்

எண்ணெய் அதிகம் குடிக்காமல், பூரி நல்ல உப்பி வர இப்பதிவில் பகிரப்பட்டுள்ள சில எளிய குறிப்புகளை பின்பற்றினாலே போதும்…

poori without absorbing oil

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பூரி என்றால் கொள்ளை பிரியம். ஆனால் ஒரு சில சமயங்களில் மாவு சரியான பக்குவத்தில் இருப்பதாக தோன்றினாலும், பூரி அதிக எண்ணெய் குடிக்கும் அல்லது சில சமயங்களில் பூரி மொறுகலாக அப்பளம் போல் மாறிவிடும். எனவே இன்று இப்பதிவில் உங்களுக்காக சில எளிய குறிப்புகளை பகிர்ந்துள்ளோம். இதை பின்பற்றினால் நீங்கள் எப்போது பூரி செய்தாலும் நல்லா புசுபுசுன்னு எண்ணெய் குடிக்காமல் அட்டகாசமாக வரும்.

பூரிக்கு பிசையும் மாவு முதல் பொறிக்கும் எண்ணெய் வரை சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் சரியான பக்குவத்தில் பூரிகளை செய்ய முடியும். பெர்ஃபெக்ட் பூரிக்கான குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.

எண்ணெயின் வெப்பநிலை

cooking oil for perfect poori

பூரியை பொரிப்பதற்கு எண்ணெய் சரியான வெப்பநிலையில் இருக்க வேண்டும். எண்ணெயின் வெப்பநிலை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் குறைவான வெப்பநிலையில் பூரியை பொரித்தெடுத்தால் எண்ணெய் அதிகம் குடிக்கும். அதேசமயம் அதிக வெப்ப நிலையில் பூரி மாவை போடும் பொழுது, வெளிப்புறம் கருப்பாகவும் உட்புறம் வேகாமலும் இருக்கும்.

எனவே எப்போது பூரி செய்தாலும் முதலில் எண்ணெயை நன்கு சூடாக்கி, பின்னர் மிதமான தீயில் வைத்து பூரியை பொரித்தெடுக்கலாம்.

பூரி அதிக எண்ணெய் குடித்தால் எப்படி சமாளிக்கலாம்

பூரி அதிக எண்ணெய் குடித்தால் இதை சரி செய்வதற்கு ஒரு சில எளிய குறிப்புகளை பின்பற்றலாம். பூரிக்கான மாவு பிசையும் பொழுது அதிக தளர்வாகவோ அல்லது இறுக்கமாகவோ பிசைவதை தவிர்க்க வேண்டும். மேலும் பூரிக்கான மாவை 15 நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைத்த பின் பூரி செய்யலாம். இவ்வாறு செய்வதால் பூரி அதிக எண்ணெய் குடிக்காமல் வரும்.

ஸ்பெஷல் டிப்ஸ்

tips for perfect poori

பூரிகளை பொரிக்கும் போதெல்லாம் எண்ணெயில் சிறிதளவு உப்பு சேர்க்கவும். இந்த குறிப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எண்ணெயில் சிறிதளவு உப்பு சேர்ப்பதால் பூரி அதிக எண்ணெய் குடிக்காது.

ஆனால் எண்ணெயில் உப்பு சேர்க்கும் பொழுது கூடுதல் கவனத்துடன் சேர்க்கவும். ஏனெனில் உப்பு அதிகமாகிவிட்டால் பூரியின் சுவையும் உப்பாக இருக்கும். அதிக உப்பு பயன்படுத்த வேண்டாம்.

பூரி நீண்ட நேரத்திற்கு உப்பி இருக்க என்ன செய்யலாம்?

பூரி மொறுகலாக நீண்ட நேரத்திற்கு புசுபுசுன்னு உப்பி இருக்க மாவு பிசையும் பொழுது ஒரு ஸ்பூன் ரவை சேர்த்து பிசையவும். ரவை பூரியை நீண்ட நேரத்திற்கு மொறுகளாக வைத்திருக்க உதவும்.

இந்த பதிவும் உதவலாம்: நெல்லிக்காய் மோர் குழம்பு ரெசிபியை ஒரு முறை செய்து பாருங்க, இனி அடிக்கடி செய்வீங்க!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP