herzindagi
perfect palada payasam

விஷு கொண்டாட்டத்திற்கு கேரள ஸ்டைலில் பாலடை பிரதமன் ரெடி!

பாலட பிரதமன் - விநோதமான பெயராக இருக்கிறதே என பார்க்காதீர்கள். தமிழகத்தில் பால் பாயாசம் போல கேரளாவில் சுப நிகழ்வுகளுக்கு தயாரிக்கப்படும் ஒரு வகையான பாயாசம் இது.
Editorial
Updated:- 2024-04-12, 12:24 IST

கேரளாவில் ஓணம், மலையாளப் வருடப் பிறப்பான விஷு மற்றும் பல சுப நிகழ்வுகளுக்கு பாயாசம் கண்டிப்பாக தயாரிக்கப்படும். தமிழகத்தில் ஜவ்வரிசி பாயாசம், பால் பாயாசம், சேமியா பாயாசம் உள்பட பல வகையான பாயாசங்கள் உள்ளன. அதே போல கேரளாவில் அடைப் பிரதமன், பாலடை பிரதமன், அரிசி பாயாசம் என பல விதமான பாயாசங்கள் உண்டு. அந்த வகையில் விஷு வருடப் பிறப்பு கொண்டாட்டத்திற்கு பாலடை பிரதமன் எப்படி செய்வது என பார்க்கலாம்.

palada payasam

பாலடை பிரதமன் செய்யத் தேவையானவை

  • பாலடை
  • முழு தேங்காய்
  • வெல்லம்
  • சுக்கு தூள்
  • நெய்
  • ஏலக்காய்
  • முந்திரி
  • உப்பு
  • தேங்காய் எண்ணெய்

மேலும் படிங்க கோடை வெயிலுக்கு கம்பங்கூழ் குடிங்க! உடல் சூடு பறந்து போய்விடும்

பாலடை பிரதமன் செய்முறை

  • பாலடை பிரதமன் செய்வதற்கு தரமான பாலடை தேவை. சுமார் 200 கிராம் பாலடயை தண்ணீரில் 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
  • இதையடுத்து 350 கிராம் வெல்லத்தை பொடிதாக்கி அதை கடாயில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். இதில் இருக்கும் அழுக்கு, தூசியை வடிகட்டி விடுங்கள்.
  • பாத்திரம் ஒன்றில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அது கொதித்த பிறகு ஊறவைத்து வடிகட்டிய பாலடயை சேர்த்து வேக வைக்கவும்.
  • மென்மையாக வேக வைத்த பிறகு குளிர்ந்த நீரில் போட்டு பாலடயை உதிரி உதிரியாக எடுக்கவும்.
  • இப்போது துருவிய தேங்காயில் இருந்து மூன்று விதமாக பால் எடுக்கப் போகிறோம்.
  • இயல்பாக தேங்காயை மிக்ஸியில் போட்டு அரைத்து தேங்காய் பால் எடுக்கவும். இது கெட்டியாக இருக்கும்.
  • அடுத்ததாக அதே தேங்காயில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து தேங்காய் பால் எடுக்கவும். இது முதல் பாலை விட கொஞ்சம் தண்ணியாக இருக்கும்.
  • இதன் பிறகு அதே தேங்காயில் மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து தேங்காய் பால் எடுக்கவும். இது மிகவும் தண்ணியாக இருக்கும். இதை தான் நாம் முதலில் பயன்படுத்த போகிறோம்.
  • பேனில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி அதில் பத்து முந்திரி பருப்பு போடவும். நிறம் மாறியவுடன் எடுத்துவிடுங்கள்.
  • அதே பேனில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் ஊற்றி 100 கிராம் தேங்காயை போட்டு கொஞ்சம் வறுத்தெடுக்கவும்.
  • பாத்திரத்தில் வெல்ல பாகு ஊற்றி அதில் பாலடை சேர்க்கவும். இது கொஞ்சம் கெட்டியான பிறகு ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கவும். இப்போது மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி எடுத்த தேங்காய் பாலை சேர்க்கவும்.
  • குறைந்த தீயில் நன்றாக மிக்ஸ் செய்யுங்கள். கொஞ்சம் கெட்டியான பிறகு வாசனைக்காக சுக்கு பவுடர், ஒரு சிட்டிகை உப்பு, கால் ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
  • இப்போது இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி எடுத்த தேங்காய் பாலை சேர்த்து மிக்ஸ் செய்யவும். அடுப்பை நிறுத்திவிட்டு இறுதியாக தண்ணீர் சேர்க்காமல் எடுத்த தேங்காய் பால் சேர்க்கவும்.
  • சூட்டிலேயே நன்கு மிக்ஸ் செய்து வறுத்த தேங்காய் மற்றும் முந்திரி போடுங்கள். கொஞ்ச நேரத்திற்கு அப்படியே விடுங்கள். விஷு கொண்டாட்டத்திற்கான பாலடை பிரதமன் ரெடி.
Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com