கோடை வெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் வாசகர்களை குளிர்ச்சியாக வைப்பதற்கு தமிழகத்தின் பாரம்பரியமான உணவு செய்முறை பற்றி பார்க்கப் போகிறோம். இன்றைய தலைமுறையினர் பலருக்கும் இந்த உணவின் அருமை தெரிவதில்லை. சிறு தானியங்களில் சிறந்த தானியம் என ஒன்றை குறிப்பிட வேண்டுமென்றால் அது கம்பு தான். உடலுக்கு தேவையான நார்ச்சத்து மற்றும் எலும்புகளை வலுவாக்கும் ஊட்டச்சத்து இதில் கிடைக்கின்றன. வெயில் காலத்தில் சாலையோரக் கடைகளில் ஒரு செம்பு 20 முதல் 30 ரூபாய்க்கு கிடைக்கும். சரி சுற்றி வளைத்து பேச விரும்பவில்லை. கடவுளின் உணவு என்று சொல்லப்படும் கம்பங்கூழை வீட்டிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம். கூழ் என்றவுடன் கோயில் விழாக்களில் ஊற்றப்படும் கூழ் என்று சாதாரணமாக நினைக்க வேண்டாம். வயல் வேலைக்கு செல்லும் விவசாயிகள் காலையில் இதை குடிப்பார்கள். சுமார் ஆறு மணி நேரத்திற்கு பிறகே சாப்பிடுவார்கள். அதுவரை கம்பங்கூழ் பசி தாங்கும். கம்பங்கூழ் உடலுக்கு குளிர்ச்சி அளிக்க கூடியது. இதன் செரிமானம் நேரம் எடுக்கும் என்பதால் நீங்கள் முழுமையாக உணர்வீர்கள். உடலில் அதிக கொழுப்பு இருக்கும் நபர்கள் இதை காலையில் குடித்துவிட்டால் மதிய வேலையில் சாப்பிட வேண்டிய அவசியமே கிடையாது. இது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
மேலும் படிங்க ரம்ஜான் ஸ்பெஷல் குனாஃபா ஸ்வீட் செஞ்சு பாருங்க! மகிழ்ச்சி இரட்டிப்பாகும்
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com