தேங்காய் சேர்க்காத கிராமத்து மட்டன் குழம்பு இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க!

என்ன தான் நம்ம வீட்ல பார்த்து பார்த்து கறி குழம்பு வெச்சாலும், இந்த கிடா விருந்துல சாப்பிடற கறி குழம்பு மாதிரி வரவே வராது…

mutton curry village style without coconut

எப்பயும் நாமலே சமைச்சு சாப்பிட்டு அசந்து போயிருக்க டைம்ல யாராச்சும் கிடா விருந்துக்கு கூப்பிட்டா எப்படி இருக்கும்? சாமிக்கு நன்றிய சொல்லிட்டு, கிச்சனுக்கு குட்பை சொல்லிட்டு ஜாலியா கிளம்பிட வேண்டியது தான். அங்க போனா நமக்கு முன்னாடி கூட்டமா 100 பேரு நிப்பாங்க. எல்லாத்தையும் சமாளிச்சு பந்தில போயி உட்கார்ந்தா, பாக்குறவங்க எல்லாம் நம்மலயே பாக்குற மாதிரி ஒரு பீலிங்…

என்னதான் கிடா விருந்தா இருந்தாலும் கொஞ்சம் நாசுக்கா சாப்பிடுவோம்னு கட்டுப்படுத்திட்டு கொஞ்சமா சாப்பிடுவோம். மனசு வேணும்னு சொன்னாலும் வாய் மட்டும் வேண்டாம்னு சொல்லும். அப்படி நான் வேண்டான்னு சொல்றப்போ, டேய் அந்த பிள்ளை மாசமா இருக்கு நல்லா கறிய அள்ளி போடுனு பாசமா நாலு பேரு, வீட்டுக்கு வரப்போ ஒரு பார்சலையும் சேர்த்து குடுப்பாங்க. அந்த மனசு தான் சார் கடவுள்!

இப்படி ஒரு நாள் சாப்பிட்டது தான் இந்த கறி குழம்பு. தேங்காய் போடாம அவளோ கெட்டியா ஒரு கறி குழம்பு. அவங்க கிட்ட நான் கேட்டு தெரிஞ்சுகிட்ட அந்த ரெசிபி இப்போ உங்களுக்கும் சொல்லப் போறேன். என் பையனுக்கு 4 வயசாச்சு, இன்னும் எனக்கு அந்த கறி குழம்போட சுவை மறக்கல. கிராமத்து மட்டன் குழம்பு ரெசிபி இதோ உங்களுக்காக…

தேவையான பொருட்கள்

spices for mutton curry

  • மட்டன் - ½ கிலோ
  • தனியா - 4 டீஸ்பூன்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • சோம்பு - 3/4 டீஸ்பூன்
  • மிளகு - 3/4 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் 5-6
  • சின்ன வெங்காயம் - 1 கப்
  • பூண்டு - 15
  • இஞ்சி - 2 அங்குல துண்டு
  • கறிவேப்பிலை - 10
  • எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • மஞ்சள் பொடி - ½ டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் 5-7
  • தக்காளி - 1
  • கறிவேப்பிலை -10
  • சோம்பு -½ டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 1

செய்முறை

south indian mutton curry

  • முதல்ல குழம்புக்கு தேவையான மசாலாவ அரைச்சு வெச்சுக்கலாம். ஒரு கடாயில எண்ணெய் எதுவும் சேர்க்காம காய்ந்த மிளகாய், சீரகம், சோம்பு, மிளகு, கறிவேப்பிலை சேர்த்து வாசம் வர வரைக்கும் வறுத்து ஆற வச்சுக்கோங்க.
  • அடுத்ததா அதே கடாயில் கொஞ்சமா எண்ணெய் சேர்த்துட்டு சின்ன வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து தக்காளி மசிக்கிற பதத்துக்கு வதக்கி எடுத்துக்கோங்க.
  • வதக்குன இந்த ரெண்டு மசாலாவையும் ஆறவிட்டு நல்லா பேஸ்ட் மாதிரி அரைச்சு எடுத்துக்கோங்க.
  • இப்போ ஒரு குக்கர்ல கொஞ்சமா எண்ணெய் விட்டு சோம்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிச்சுகோங்க.
  • இது கூட சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி கழுவி சுத்தம் செஞ்சு வெச்சிருக்க மட்டன், மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நல்லா வதக்கிக்கோங்க.
  • மட்டன் வதங்குனதும் அரைச்சு வெச்சுருக்க மசாலா சேர்த்துக்கோங்க. மிக்ஸிய கழுவி கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கோங்க. குக்கர மூடி 10-12 விசில் விட்டு மட்டன நல்லா வேக வெச்சு எடுத்துக்கோங்க.
  • விசில் அடங்குனதும் குக்கர திறந்து குழம்ப கொதிக்க விடுங்க. திக்கா வந்ததுதும் கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: எலும்புகளுக்கு வலு சேர்க்கும் பாரம்பரிய ராகி சிமிலி உருண்டைகள்

குறிப்பு

உங்களுக்கு பட்டை, கிராம்பு வாசனை பிடிக்கும்னா தாளிக்கிறப்போ சேர்த்துக்கோங்க. பிடிக்காதவங்க என்ன மாதிரி விட்டுடுங்க. அவளோ தான், இந்த ரெசிபிய நீங்களும் ட்ரை பண்ணிட்டு எப்படி வந்துச்சு மறக்காம சொல்லுங்க.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP