எலும்புகளுக்கு வலு சேர்க்கும் பாரம்பரிய ராகி சிமிலி உருண்டைகள்

ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளுக்கு பதிலாக, ஊட்டசத்துக்கள் நிறைந்த இதுபோன்ற பாரம்பரியமான உணவுகளை செய்து சாப்பிடலாம்…

traditional ragi simili recipe for strong bones

அதிக செலவில் இல்லாமல் அதே சமயத்தில் சுலபமாக செய்யக்கூடிய ஆரோக்கியமான சிற்றுண்டிகளை தேடுகிறீர்களா? வீட்டில் இருக்கக் கூடிய சில பொருட்களை கொண்டு நிமிடத்தில் இந்த சிற்றுண்டியை செய்திடலாம். பாரம்பரிய முறையில் ராகி மாவு, வேர்க்கடலை போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சிற்றுண்டியின் செய்முறையை இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம்.

ராகியில் புரதம், இரும்பு, கால்சியம் அதிகம் உள்ளன. இவை எலும்புகளை வலுப்படுத்தவும், சர்க்கரை நோயை தடுக்கவும், எடை இழப்புக்கும் நன்மை பயகின்றன. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த ராகியை கொண்டு பாரம்பரிய முறையில் செய்யப்படும் இந்த ராகி சிமிலி உருண்டைகளை நீங்களும் ஒரு முறை செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்

ragi simili recipe

  • ராகி மாவு - 200 கிராம்
  • வேர்க்கடலை - 300 கிராம்
  • எள் - 100 கிராம்
  • கொப்பரை தேங்காய் - அரை மூடி
  • ஏலக்காய் 7-8
  • வெல்லம் - 1/2 கிலோ
  • உப்பு - 1 சிட்டிகை

செய்முறை

ragi simili urundai

  • முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
  • இதனுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக மாவு பிசைந்து கொள்ளவும். இதனை சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
  • இதை ஒரு சப்பாத்தி கல்லில் போட்டு சப்பாத்தி சுடுவது போல் சிறிதளவு எண்ணெய் விட்டு இருபுறமும் வேகும் வரை சுட்டெடுக்கவும்.
  • மீதம் உள்ள ராகி மாவு அனைத்தையும் இதே போல சப்பாத்திகளாக சுட்டெடுக்கவும்.
  • இப்போது ஒரு கடாயை சூடாக்கி வேர்க்கடலையை நன்கு வறுத்துக் கொள்ளவும். வேர்க்கடலை நன்கு வறுபட்ட பிறகு ஆறவிடவும்.
  • வேர்க்கடலையின் தோலை நீக்கித் தனியாக எடுத்து வைக்கவும்.
  • அடுத்ததாக எள்ளையும் வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  • இப்போது ஒரு ஆட்டுரலை சுத்தம் செய்து, அதில் சுட்டு வைத்திருக்கும் ராகி சப்பாத்திகளை பொடி பொடியாக பிய்த்து போடவும்.
  • பிறகு கொப்பரை தேங்காய் மற்றும் ஏலக்காய் சேர்த்து பொடிக்கவும்.
  • இவை அனைத்தும் நன்கு பொடியான பிறகு வெல்லத்தையும் இதனுடன் சேர்த்து இடித்துக் கொள்ளவும்.
  • இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து நல்ல மனம் வீசும். இதை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி பரிமாறலாம்.
  • உரல் இல்லாதவர்கள் மிக்ஸியையும் பயன்படுத்தலாம். இந்த ஆரோக்கியமான சிற்றுண்டியை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள்.

இந்த பதிவும் உதவலாம்: அட்டகாசமான மசாலா வெள்ளரி லெமனேடு, செய்ய வெறும் 10 நிமிஷம் போதும்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP