மண்சட்டியில் நெத்திலி மீன் குழம்பு செய்முறை; வாசனை மூக்கை துளைக்கும்

நெத்திலி மீன் குழம்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சூடான சாதத்தில் இரண்டு கரண்டி நெத்திலி மீன் குழம்பு ஊற்றி சாப்பிட்டால் எதோ சாதித்தது போன்ற மனநிலை கிடைக்கும். அட்டகாசமான சுவையில் நெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படி என பார்க்கலாம்.
image

ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டால் ஆடு, கோழி கறி எடுத்து சாப்பிட வேண்டும் என கட்டாயம் கிடையாது. கடலில் இருந்து கிடைக்கும் மீன், இறால், நண்டு போன்ற உணவுகளும் வாய்க்கு அறுசுவையை கொடுக்கும். கடலில் கிடைக்கும் நெத்திலி மீன் மிகவும் ருசியானது. 40 நிமிடங்களில் இந்த நெத்திலி மீன் குழம்பை தயாரித்துவிடலாம். மாங்காய் போட்டு சமைக்கும் போது நெத்திலி மீன் குழம்பின் ருசி அதிகமாகிறது. மீன் குழம்பு என்றாலே வீட்டில் வாசனை துளைக்கும். நெத்திலி மீன் குழம்பு என்றால் சொல்லவே தேவையில்லை.

nethili meen kulambu

நெத்திலி மீன் குழம்பு செய்ய தேவையானவை

  • நெத்திலி மீன
  • சின்ன வெங்காயம்
  • மாங்காய்
  • தக்காளி
  • முருங்கை
  • பூண்டு
  • பச்சை மிளகாய்
  • புளி
  • தேங்காய் துருவல்
  • மல்லித் தூள்
  • மிளகாய் தூள்
  • மஞ்சள் தூள்
  • நல்லெண்ணெய்
  • உப்பு
  • பல் பூண்டு

குறிப்பு : நெத்திலி மீனை தலை, வால் நீக்கி முள் எடுத்து மஞ்சள் தண்ணீரில் கழுவி வைக்கவும்.

நெத்திலி மீன் குழம்பு செய்முறை

  • மண் சட்டியில் செய்யும் போது நெத்திலி மீன் குழம்பின் ருசி கூடுதலாக இருக்கும். மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கால் டீஸ்பூன் கடுகு போடுங்கள்.
  • கடுகு வெடித்தவுடன் அரை டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் வெந்தயம், அரை டீஸ்பூன் மிளகு சேர்த்து 30 விநாடிகளுக்கு வறுக்கவும்.
  • அடுத்ததாக மூன்று பல் பூண்டு இடித்து போடுங்கள். பத்து சின்ன வெங்காயம் சேர்க்கவும். சின்ன வெங்காயம் இல்லையெனில் இரண்டு பெரிய வெங்காயத்தை பொடிதாக நறுக்கி போடவும்.
  • வெங்காயம் வதங்குவதற்கு கொஞ்சமாக உப்பு சேர்க்கவும். இப்போது கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு டீஸ்பூன் மிளகாய் தூள், மூன்று டீஸ்பூன் மல்லித் தூள் போடவும்.
  • இப்போது ஒரு தக்காளியை பொடிதாக நறுக்கி சேருங்கள். கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். தக்காளியின் பச்சை வாசனை போன பிறகு அடுப்பை ஆஃப் செய்யவும்.
  • இதனுடன் அரை கப் தேங்காய் துருவல் சேர்த்து மீன் குழம்பிற்கான மசாலா பேஸ்ட் தயாரிக்கவும். குழம்பு கெட்டியாக வேண்டும் என்றால் தேங்காய் துருவல் சேருங்கள் அல்லது தவிர்த்துவிடலாம்.
  • மண் சட்டியில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த மசாலாவை போட்டு இரண்டு பச்சை மிளகாய் நறுக்கி போடவும். இதோடு கால் கப் மாங்காய் சேர்க்கவும்.
  • கோலி குண்டு சைஸில் புளி எடுத்து அதை தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
  • நீங்கள் விரும்பினால் இதில் ஒரு முருங்கைக்காய் போடலாம். ஒன்றரை டம்ளர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு 5 நிமிடங்களுக்கு கொதிக்கவிடுங்கள்.
  • கொதி வந்ததும் தண்ணீரில் நன்கு கழுவிய அரை கிலோ நெத்திலி மீன்களை போடவும்.

12 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் சூடுபடுத்தவும். நெத்திலி மீன் குழம்பு ரெடி...

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP