Flax Seeds Burfi : வெறும் 2 பொருட்கள் போதும், சூப்பர் ஹெல்த்தியான ஆளி விதை பர்பியை இன்றே செய்து பாருங்கள்!

ஆளி விதைகள் மற்றும் வெல்லத்தைக் கொண்டு சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த இந்த சிற்றுண்டியை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்…

flax seed jaggery burfi
flax seed jaggery burfi

இனிப்பான, ஆரோக்கியமான அதே சமயம் சுவையான சிற்றுண்டியை சாப்பிட வேண்டுமா? நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த இந்த ஆளி விதை பர்பி உங்களுக்கான சரியான தேர்வாக இருக்கும். குளூட்டன் இல்லாத இந்த சிற்றுண்டி குளூட்டன் உணர்திறன் உள்ளவர்களுக்கும் ஏற்றது.

தலைமுடியின் ஆரோக்கியம் முதல் எடை இழப்பு வரை ஆளி விதைகள் ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளது. பொதுவாக ஆளி விதை பொடியை தண்ணீர் அல்லது மோருடன் கலந்து குடிப்பது வழக்கம். இன்று கொஞ்சம் வித்தியாசமாக இந்த அருமையான பர்பி செய்த ருசியுங்கள். இந்த ரெசிபி செய்வதற்கு பதம் மிகவும் முக்கியமானது. இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள சில குறிப்புகளை பின்பற்றினால் நீங்களும் பெர்ஃபெக்ட்டான பர்பி செய்திடலாம். ஆளி விதை பர்பி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

flax seed recipes

  • ஆளி விதை - 1 கப்
  • வெல்லம் - ½ கப்
  • தண்ணீர் - ¼ கப்
  • ஏலக்காய் பொடி - ¼ டீஸ்பூன்(விரும்பினால்)

செய்முறை

flax seed burfi without white sugar

  • ஒரு கடாயில் ஆளி விதைகளை சேர்த்து லேசாக மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். அதிக நேரம் வறுக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • இவை நன்கு ஆறியதும் ஏலக்காய் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
  • இப்போது அதே கடாயில் 1/4 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
  • இதனுடன் அரை கப் சர்க்கரை சேர்த்து பாகு தயாரித்துக் கொள்ளவும்.
  • ஒரு கம்பி பதம் வந்த பிறகு ஆளி விதை பொடியை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
  • இவை இரண்டும் ஒன்று திரண்டு கடாயில் ஒட்டாமல் வரும் பதம் வந்த பிறகு அடுப்பை அணைக்கவும்.
  • இதனை நெய் தடவிய ஒரு தட்டில் பரப்பி வைக்கவும்.
  • உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் கட் செய்து பரிமாறலாம்.
  • ஆரோக்கியமான சிற்றுண்டியை விரும்புபவர்கள் இந்த ஆளி விதை பர்பியை நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள்

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க உதவும் ABC ஜூஸ்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP