Paneer Butter Masala in Tamil: சுண்டி இழுக்கும் பன்னீர் பட்டர் மசாலா

சப்பாத்திக்கு ஏற்ற சுவையான பன்னீர் பட்டர் மசாலா எப்படி தயார் செய்யலாம்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

paneer masala tamil

சப்பாத்திக்கு குருமாவை விடவும் பன்னீர் பட்டர் மசாலாவை பலரும் விரும்புகின்றனர். குறிப்பாக சைவ பிரியர்களுக்கு பன்னீர் சிக்கன் போன்றது. இதில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் அசைவத்தை காட்டிலும் பன்னீர் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. சப்பாத்திக்கு கிழங்கு, குருமா என சாப்பிட்டு போரடித்தவர்கள் நிச்சயம் பன்னீர் பட்டர் மசாலாவை முயற்சி செய்து பார்க்கலாம்.

வட இந்திய உணவான இது தற்போது தென்னிந்தியாவிலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக மாறியுள்ளது. புளிப்பு, காரம், ஸ்வீட் என பன்னீர் பட்டர் மசாலா நாவுக்கு அலாதியான ருசியை தருவதால் குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுகின்றனர். பானி பூரிக்கு பிறகு தென்னிந்தியாவில் பன்னீர் பட்டர் மசாலா தனி இடத்தை பிடித்து விட்டது.

அதே நேரம் இதை வீட்டில் செய்வதை காட்டிலும் பலரும் ஹோட்டலில் வாங்குவதையே வழக்கமாக வைத்துள்ளனர். கடையில் வாங்கி சாப்பிடுவதை விடவும் வீட்டிலேயே செய்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

எனவே எளிமையான முறையில் பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

  • பன்னீர் - 200 கிராம்
  • வெண்ணெய் - 200 கிராம்
  • கடலை எண்ணெய் - 50 கிராம்
  • வெங்காய விழுது - 200 கிராம்
  • தக்காளி விழுது - 200 கிராம்
  • பிரியாணி இலை - 2
  • கிராம்பு - 2

இந்த பதிவும் உதவலாம்:மிளகு ரசம் இப்படி செய்யுங்கள்

  • ஏலக்காய் - 2
  • அன்னாசி பூ - 2
  • இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  • முந்திரி பேஸ்ட்
  • தயிர் - 1/2 கப்
  • ஃபிரஷ் கிரீம் – 1/2 கப்
  • தேங்காய் பால் - 1/2
  • காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 2
  • கஸ்தூரி மேத்தி - 1/4 டீஸ்பூன்

chapathi masala

செய்முறை

  • முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் சம அளவு எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
  • பின்பு அதில் கிராம்பு, பிரியாணி இலை, அன்னாசி பூ சேர்த்து தாளித்து அதில் வெங்காய விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து இரண்டையும் பச்சை வாசனை போகும் வரை எண்ணெய்யில் வதக்கவும்.
  • இப்போது தக்காளி விழுது சேர்த்து நன்கு கலந்து அதில் தயிர் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
  • பின்பு அதில் 20 முந்திரி பருப்புகளை திக் பேஸ்ட் போல் அரைத்து சேர்க்கவும். தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றவும்.
  • கலவையை விடாமல் கரண்டியால் கிளறவும். அடுத்து இதில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
  • முதல் கொதி வந்ததும் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து அதன் மேல் ஃபிரஷ் கிரீமை ஊற்றவும்.
  • இரண்டையும் நன்கு கலந்து விட்டு இறுதியாக கொத்தமல்லி, கஸ்தூரி மேத்தி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
  • அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும். அவ்வளவு தான் அசத்தலான பன்னீர் பட்டர் மசாலா தயார்.

இந்த பதிவும் உதவலாம்:கேஎஃப்சி சிக்கன் இனி வீட்டிலேயே செய்யலாம்

இதை சப்பாத்தி, நெய் சோறு, புலாவ் ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாறினால் வீட்டில் இருப்பவர்கள் ஒருபிடி பிடிப்பார்கள். நீங்களும் கண்டிப்பாக வீட்டிலேயே பன்னீர் பட்டர் மசாலாவை செய்து குடும்பத்துடன் உண்டு மகிழுங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP