wheat Banana Bread : நன்கு பழுத்த வாழைப்பழம் இருக்கா? உடனே இந்த ஹெல்த்தியான பனானா பிரட் செய்து அசத்துங்க!

நன்கு பழுத்த வாழைப்பழங்களை இனி தூக்கி போடாதீங்க! அதை அற்புதமான பனானா பிரட் ஆக மாற்றிடலாம்...

banana bread recipe easy

பேக்கிங் என்றாலே ஆரோக்கியமற்றது என்ற வரைமுறையை உடைத்து எரிந்து சிறுதானியங்கள், கோதுமை மாவு, நாட்டு சர்க்கரை போன்ற பொருட்களை கொண்டு செய்யப்படும் வித்யாசமான முயற்சிகளை வரவேற்கும் அனைத்து பெண்களுக்கும் சிறப்பு பாராட்டுக்கள்.

பொதுவாக நன்கு பழுத்த வாழைப்பழங்களை கொண்டு அப்பம், பேன் கேக், பிரட் போன்ற பல அற்புதமான ரெசிபிகளை செய்யலாம். இன்றைய பதிவில் நன்கு பழுத்த வாழைப்பழங்களை வைத்து ஆரோக்கியமான பனானா பிரட் ரெசிபியை பார்க்கப்போகிறோம். மைதா, வெள்ளை சர்க்கரை சேர்க்காத இந்த ரெசிபியை கட்டாயம் நீங்களும் செய்து, உண்டு மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்

ripe banana bread recipe

  • வாழைப்பழம் - 4
  • நாட்டு சர்க்கரை - ½ கப்
  • எண்ணெய் - ½ கப்
  • வெண்ணிலா எஸ்ஸன்ஸ் - 1 டீஸ்பூன்
  • கோதுமை மாவு - 1 ½ கப்
  • பேக்கிங் பவுடர் - 1 ½ டீஸ்பூன்
  • பேக்கிங் சோடா - ½ டீஸ்பூன்
  • உப்பு - ஒரு சிட்டிகை

முன் ஏற்பாடுகள்

  • ஓவன் அல்லது அடுப்பை ப்ரீ ஹீட் செய்து கொள்ளவும்.
  • பிரட் டின்னில் எண்ணெய் தடவி தயாராக வைக்கவும்.

செய்முறை

soft banana bread

  • ஒரு அகண்ட பாத்திரத்தில் நறுக்கிய வாழைப்பழங்களை சேர்த்து, நன்கு மசித்து கொள்ளவும்.
  • இதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து ஒன்று சேர கலக்கவும்.
  • இப்போது மசித்த வாழைப்பழத்துடன் எண்ணெய் மற்றும் வெண்ணிலா எஸ்ஸன்ஸ் சேர்த்து கலக்கவும். நீங்கள் விரும்பினால் இலவங்கப்பட்டை மற்றும் ஜாதிக்காய் பொடியையும் சேர்த்துக்கொள்ளலாம்.
  • இதன் மீது ஒரு சல்லடை வைத்து பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு மற்றும் கோதுமை மாவை சலித்து கொள்ளவும்.
  • இவை அனைத்தையும் ஒரே திசையில் ஒன்று சேர கலந்து பேக்கிங் டின்னில் ஊற்றவும். மாவு கெட்டியாக இருப்பதாக உணர்ந்தால் சிறிதளவு தண்ணீர் அல்லது பால் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இதனை 180 டிகிரி செல்சியஸில் (350 டிகிரி ஃபாரன்ஹீட்) 30 முதல் 40 நிமிடங்களுக்கு பேக் செய்து எடுக்கலாம்.
  • இதனை ஓவன் இல்லாமல் அடுப்பிலும் 30-40 நிமிடங்களுக்கு பேக் செய்து எடுக்கலாம்.
  • குறிப்பிட்ட நேரத்தை விட பேக் செய்ய கூடுதல் நேரம் தேவைப்படலாம். டூத் பிக் சுத்தமாக வெளியே வரும் வரை பேக் செய்து எடுக்கவும்.
  • இதை முழுவதும் ஆறிய பிறகு துண்டுகள் போட்டு பரிமாறலாம்.
  • வீட்டில் பழுத்த வாழை பழங்கள் இருந்தால் இந்த ரெசிபியை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ள அனைவரின் பாராட்டுக்களையும் பெறுவது உறுதி!

இந்த பதிவும் உதவலாம்: மொறு மொறுப்பான பிரெஞ்சு ப்ரைஸ் இன் ரகசியம் இது தான்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP