Masala Cucumber Lemonade : அட்டகாசமான மசாலா வெள்ளரி லெமனேடு, செய்ய வெறும் 10 நிமிஷம் போதும்!

இந்த கோடையை சமாளிக்க எலுமிச்சை மற்றும் வெள்ளரியை கொண்டு குளிர்ச்சி தரும் ஒரு அற்புதமான பானத்தை செய்து குடிக்கலாம்…

cucumber lemonade recipe easy and quick

கோடை காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இதற்கு அதிக நீர்ச்சத்து உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பருவ காலத்தில் தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரிக்காய், சுரைக்காய் போன்றவற்றை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

வெயிலை சமாளிக்கவும், உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் பகல் வேளையில் சில பானங்களை குடிக்கலாம். இது போன்ற சுவையான கோடைகால பானத்தை பிரபல செஃப் குணால் கபூர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த வித்யாசமான மசாலா வெள்ளரி லெமனேடை எளிதாக, வெறும் பத்து நிமிடத்தில் செய்திடலாம். மேலும் நார்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய் உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். இன்றைய பதிவில் மசாலா வெள்ளரி லெமனேடு செய்ய கற்றுக்கொள்வோம்.

தேவையான பொருட்கள

cucumber juice for summer

  • வெள்ளரிக்காய் - 2
  • புதினா இலைகள் - கைப்பிடி அளவு
  • சர்க்கரை - 2 ½ டேபிள் ஸ்பூன்
  • சீரக பொடி - 1 டீஸ்பூன்
  • கருப்பு உப்பு - ½ டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எலுமிச்சை சாறு - 3 டேபிள் ஸ்பூன்
  • தனியா பொடி - 1 டீஸ்பூன்
  • தண்ணீர் - ½ கப்
  • ஐஸ் கட்டிகள் 4-5
  • ஸ்பிரைட்/சோடா - விரும்பினால்

செய்முறை

lemonade recipe for summer

  • மசாலா வெள்ளரி லெமனேடு செய்வதற்கு முதலில் வெள்ளரிக்காயின் மேல் மற்றும் கீழ் பகுதியை நீக்கிவிட்டு, தோல் சீவி கொள்ளவும்.
  • வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்க்கவும்.
  • இதனுடன் புதினா இலைகள், சீரகப் பொடி தனியா பொடி, உப்பு, கருப்பு, உப்பு, சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
  • சிறிதளவு தண்ணீர் விட்டு இதனை நன்கு அரைத்துக் கொள்ளவும்.த கலவையை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு கிளாஸில் ஐஸ் க்யூப்ஸ், மசாலா வெள்ளரி லெமனேடு மற்றும் சோடா சேர்த்து கலக்கவும்.
  • கோடைகாலத்தில் ஏற்படும் தாகத்தை தணிக்க இது போன்ற அற்புதமான லெமனேடு குடித்து ஆற்றல் மற்றும் உடல் புத்துணர்ச்சி பெறுங்கள்.

இந்த பதிவும் உதவலாம்: நன்கு பழுத்த வாழைப்பழம் இருக்கா? உடனே இந்த ஹெல்த்தியான பனானா பிரட் செய்து அசத்துங்க!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP