ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு வகைகளில் கீரைக்கு முக்கிய இடம் இருக்கிறது. இரும்புச்சத்து, வைட்டமின்கள் ஏ, சி, கே, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய சத்துகள் ஆகியவை இயற்கையாகவே கீரையில் உள்ளன.
மேலும் படிக்க: Fatty liver: கல்லீரல் பாதிப்புக்கு இதுதான் முக்கிய காரணம்: நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியல் இதோ
ஒரு கப் கீரையில் சுமார் 2.7 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது. இது ஒரு நபருக்கான ஒரு நாள் இரும்புச் சத்து தேவையில் சுமார் 15 சதவீதம் ஆகும். கீரை "நான்-ஹீம் இரும்பு" (Non-heme iron) வகையை சேர்ந்தது ஆகும். அசைவ உணவுகளில் இருந்து கிடைக்கும் இரும்புச் சத்தை போன்று, இதனால் உடலில் எளிதாக உறிந்து கொள்ள முடியாது.
இதனால் கீரையிலுள்ள முழு சத்துகளும் உடலுக்கு கிடைப்பதில்லை. எனவே, குறிப்பிட்ட சில வகையான உணவு பொருட்களுடன் கீரையை சேர்த்து சமைப்பதன் மூலம் அதன் சத்துகள் அனைத்தும் நமக்கு கிடைக்கும். அதற்கான வழிமுறைகளை இதில் காண்போம்.
கீரையில் உள்ள இரும்புச் சத்தை உடல் உறிந்து கொள்வதற்கு வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்வது ஒரு சிறந்த வழி. ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள், குடைமிளகாய் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆகியவை கீரையில் உள்ள இரும்புச் சத்தை உடல் உறிஞ்சும் அளவை கணிசமாக அதிகரிக்கும். எடுத்துக்காட்டாக, கீரை சாலட்டில் ஒரு சில துளி எலுமிச்சை சாறை சேர்ப்பது அதன் சுவையை அதிகரிப்பதுடன், அதன் இரும்புச் சத்து முழுமையாக நமக்கு கிடைக்க உதவும்.
கீரையை சரியான முறையில் சமைப்பது இரும்புச் சத்து உட்பட சில ஊட்டச்சத்துகளின் உறிஞ்சுதலை அதிகரிக்கும். கீரையை வதக்குவது அல்லது ஆவியில் வேகவைப்பது போன்ற எந்த முறையிலும் சமைக்கலாம். இதன் மூலம் அதன் சத்துகள் நமது உடலுக்கு கிடைக்க வழிவகுக்கும்.
மேலும் படிக்க: Benefits of almonds: சருமத்தை பொலிவாக்கும்; எலும்புகளை வலுப்படுத்தும் - ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்
கீரையை ஆரோக்கியமான கொழுப்புகளுடன் சேர்த்து உண்ணலாம். கீரை, கரோட்டினாய்டுகள் நிறைந்தது. மேலும், இந்த ஊட்டச்சத்துகள் கொழுப்புகளுடன் இணையும்போது சிறப்பாக செயல்படுகின்றன. உங்கள் சாலட் அல்லது பொரியல் உணவுகளில் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் அல்லது வெண்ணெயை சேர்த்துக் கொள்ளுங்கள். இது உணவுக்கு சுவையை சேர்ப்பதுடன், வைட்டமின் ஏ மற்றும் கே போன்ற கொழுப்பில் கரையும் வைட்டமின்களின் உறிஞ்சுதலை மேம்படுத்தும்.
உங்கள் இரும்புச் சத்து உட்கொள்ளலை அதிகரிக்க, கீரையை மற்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகளுடன் சேர்த்துக் கொள்ளலாம். பருப்பு வகைகள், பயிறுகள், கொண்டைக்கடலை, பாதாம் போன்ற சத்தான உணவுகளுடன் கீரையை சேர்த்துக் கொள்ளும்போது இரும்புச் சத்துக்கான கூடுதல் நன்மைகள் கிடைக்கும். உதாரணமாக, கொண்டைக்கடலை மற்றும் கீரை கலந்த பொரியல் வகை ஆகியவற்றை சமைக்கலாம். இது சுவையாக இருப்பதுடன் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.
இனி, அடுத்த முறை கீரையை சமைக்கும் போது இந்த குறிப்புகள் அனைத்தையும் நினைவில் கொள்ளுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com