வெறும் 30 நிமிடங்கள் போதும். சுவையான சீஸ் மைசூர் மசாலா தோசை ரெடி!

தோசை விரும்பி சாப்பிடும் நபர்களுக்காகவே மசாலா தோசை, நெய் தோசை, வெங்காய தோசை, ரவா தோசை என விதவிதமான தோசை ரெசிபிகள் உள்ளன

cheese mysore masala dosai

தோசையை பிடிக்காத நபர்கள் யாருமே இருக்கவே முடியாது. ஒரு சிலர் அந்தளவிற்கு தோசையின் மீது அளாதி பிரியத்துடன் இருப்பார்கள். இப்படி தோசை விரும்பி சாப்பிடும் நபர்களுக்காகவே மசாலா தோசை, நெய் தோசை, வெங்காய தோசை, ரவா தோசை என விதவிதமான தோசை ரெசிபிகள் உள்ளன. இந்த வரிசையில் இன்றைக்கு ருசியான சீஸ் மைசூர் மசாலா தோசை எப்படி செய்வது? இதற்கு தேவைப்படக்கூடிய பொருட்கள் என்னென்ன என்பது? குறித்த ரெசிபி டிப்ஸ் இதோ.

dosai making

சீஸ் மைசூர் மசாலா தோசை:

தேவையான பொருட்கள்:

தோசை மாவிற்காக..

  • அரிசி - 1 கப்
  • உளுந்தம்பருப்பு - கால் கப்
  • கொண்டக்கடலை பருப்பு- 1 டீஸ்பூன்
  • வெந்தயம் - சிறிதளவு
  • உப்பு - சுவைக்கு ஏற்ப

ஆலு மசாலா செய்ய..

  • நறுக்கிய பெரிய வெங்காயம் - 1 கப்
  • பச்சை மிளகாய் - 3
  • வேக வைத்த உருளைக்கிழங்கு - அரை கப்
  • மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி
  • இஞ்சி - சிறிதளவு
  • கறிவேப்பிலை - தாளிப்பிற்கு ஏற்ப
  • உப்பு - சுவைக்கு ஏற்ப

மைசூர் மசாலா செய்ய..

  • வெண்ணெய்- 3 தேக்கரண்டி
  • வெங்காயம்- சிறிதளவு
  • கேரட் துருவியது - சிறிதளவு
  • பாவ் பஜ்ஜி மசாலா, உப்பு - சுவைக்கு ஏற்ப

சீஸ் மசாலா தோசை செய்முறை டிப்ஸ்:

  • சீஸ் மைசூர் மசாலா தோசை செய்வதற்கு முதலில் எடுத்து வைத்துள்ள அரிசி மற்றும் உளுந்தம்பருப்பை தண்ணீரில் ஊற்றி சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக ஊற வைக்க வேண்டும். இதனுடன் வெந்தயத்தையும் ஊற வைக்கவும். பின்னர் இதை மிக்ஸி அல்லது கிரைண்டரில் நைஸாக அரைத்து புளிக்க வைத்தால் போதும். தோசைக்கான மாவு ரெடி.
  • இதையடுத்து உருளைக்கிழங்கு அதாவது ஆலு மசாலா செய்வதற்கு, கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் சிறிதளவு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள் சேர்த்து வதக்கவும். சிறிது நேரத்திற்குப் பின்னதாக உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைத்தால் போதும் ஆலு மசாலா ரெடி.
  • பின்னர் மைசூர் மசாலா செய்யவும். இதற்கு கடாயில் வெண்ணெய்யை சூடாக்கி வெங்காய், பச்சை மிளகாய், காய்கறிகள் மற்றும் பாவ் பஜ்ஜி மசாலா போன்றவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். வெண்ணெய் பிரிந்தும் வரை வேக வைத்தால் போதும். மசாலா ரெடி. சீஸ் மசாலா தோசை செய்வதற்கு இந்த இரண்டு மசாலாக்களையும் ஒன்றாக சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
cheese masala dosai recipe

இதையடுத்து தோசைக்கல்லை சூடேற்றி வழக்கமான தோசை போன்று ஊற்றிக் கொள்ளவும். இதன் மேல் செய்து வைத்துள்ள மசாலாக்கள் மற்றும் சீஸை தூவி வேகும் வரை வைத்தால் போதும். சுவையான சீஸ் மைசூர் மசாலா தோசை ரெடி. இதற்கு சாம்பார் அல்லது சட்னி வைத்து சாப்பிட்டால் போதும். சுவையை அடித்துக்கொள்ள முடியாது.

Image source - google

.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP