நாவில் கரையும் திருவையாறு அசோகா அல்வா ஸ்வீட்! எளிய செய்முறை...

இனி பண்டிகை காலங்களில் இந்த அசோகா அல்வா செய்து பாருங்கள். வீட்டின் அருகே உள்ளவர்கள் உங்கள் சமையலறையை நோக்கி படையெடுப்பார்கள்.

festive recipe ashoka halwa

அசோகா அல்வா டெல்டா மாவட்டங்களில் கிடைக்கும் பிரபலமான ஸ்வீட் ஆகும். தஞ்சாவூர் மாவட்டத்தின் திருவையாறு பகுதியில் அசோகா அல்வாவின் தயாரிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாசிப் பருப்பு, நெய் மற்றும் சர்க்கரையை மூலப்பொருட்களாக கொண்டு இந்த அசோகா அல்வா தயாரிக்கப்படுகிறது. சரியான அளவில் நெய் மற்றும் சர்க்கரை சேர்த்தால் மட்டுமே அசோகா அல்வா நல்ல பக்குவத்தில் வரும். தஞ்சாவூரில் நடைபெறும் அனைத்து சுப நிகழ்வுகளிலும் இந்த அசோகா அல்வா பரிமாறப்படும். தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கும் இதை தயாரிப்பார்கள். வாருங்கள் இதன் செய்முறையை பார்க்கலாம்...

ashoka halwa recipe

அசோகா அல்வா செய்யத் தேவையானவை

  • பாசிப்பருப்பு
  • சர்க்கரை
  • நெய்
  • குங்குமப்பூ
  • முந்திரி
  • கோதுமை மாவு
  • ஏலக்காய் தூள்
  • உலர் திராட்சை
  • கேசரி பவுடர்

அசோகா அல்வா செய்முறை

  • முதலில் ஒரு கப் அளவிற்கு பாசிப்பருப்பை எண்ணெய் ஊற்றாமல் சில நிமிடங்களுக்கு வறுத்து அதன் பிறகு மூன்று நெய் ஊற்றி குக்கரில் நான்கு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  • பாசிப்பருப்பு வெந்தவுடன் அதை வெளியே எடுத்து ஆறவிடுங்கள். அதன் பிறகு மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
  • இதனிடையே ஒரு கிராம் குங்குமப்பூவை சுடு தண்ணீரில் பத்து நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
  • இப்போது பேனில் முக்கால் கப் அளவிற்கு நெய் ஊற்றி அது சூடான பிறகு ஐந்து ஸ்பூன் கோதுமை மாவு சேர்க்கவும்.
  • கோதுமை மாவு நெய் உடன் சேர்ந்து வெந்த பிறகு அடர் மஞ்சள் நிறத்திற்கு மாறும். இந்த நேரத்தில் மிக்ஸியில் அரைத்த பாசிப்பருப்பை போடுங்கள்.
  • நன்றாக கலந்துவிட்டு கொண்டே இருங்கள். பத்து நிமிடங்கள் கழித்து பார்த்தால் கொஞ்சம் கெட்டியாக தெரியும்.
  • மைசூரு பாக் செய்யும் போது முட்டை விடும். இதே தான் அசோகா அல்வா செய்முறையிலும் காண முடியும்.
  • இந்த நேரத்தில் இரண்டு கப் அளவிற்கு சர்க்கரை சேர்க்கவும். இப்போது சர்க்கரை சேர்த்ததால் மீண்டும் கெட்டியான பதத்திற்கு மாற நேரம் எடுக்கவும்.
  • கொஞ்சம் கொஞ்மாக நெய் ஊற்றவும். பாசிப்பருப்பு மற்றும் கோதுமை மாவு நெய்-ஐ நன்கு உறிஞ்சும். ஒரு கட்டத்திற்கு மேல் நெய் உறிஞ்சப்படாது. அப்போது நெய் பயன்பாட்டை நிறுத்திவிடுங்கள்.
  • ஆரஞ்சு நிறத்தில் அல்வா வர வேண்டுமானால் கேசரி படவுர் சேர்க்கவும். அடுத்ததாக குங்குமப் பூவை தண்ணீருடன் சேர்க்கவும்.
  • இதனிடையே மற்றொரு பேனில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி, உலர் திராட்சையை வறுத்து அசோகா அல்வாவின் மீது போடுங்கள். கொஞ்சம் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
  • இரண்டு முறை நன்கு கலந்துவிட்டால் சுவையான அசோகா அல்வா ரெடி...

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP