image

Banana Feel For Face: வாழைப்பழத் தோலை இனி தூக்கி வீசாதீங்க; இப்படி பயன்படுத்துங்க எந்த வயதிலும் இளமையுடன் இருக்கலாம்!

பருவ காலங்களில் ஏற்படக்கூடிய சரும வறட்சி, தோல் எரிச்சல், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளை எவ்வித செலவும் இல்லாமல் சரி செய்ய வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் வாழைப்பழ தோலைக் கொண்டு பேசியல் செய்துப் பாருங்கள்.  
Editorial
Updated:- 2025-12-10, 13:16 IST

நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையில் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடும் போது உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு செரிமானம் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது. இந்த பழங்களைச் சாப்பிடும் போது இதன் தோலை ஒன்று மாடு, ஆடு போன்றவற்றிற்குக் கொடுப்பார்கள். ஒருவேளை இல்லையென்றால் குப்பைத் தொட்டிக்குத் தான் போகும். இனி தவறிக்கூட அப்படி செய்துவிடுவார்கள். பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்களைக் கொண்டு வாழைப்பழத் தோலில் பல்வேறு நன்மைகள் உள்ளது. குறிப்பாக குளிர், மழை, வெயில் போன்ற பருவக்காலங்களில் ஏற்படக்கூடிய சரும பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு வாழைப்பழ தோல் பேருதவியாக இருக்கும். எப்படி? வாழைப்பழத் தோலை எப்படி சருமத்தைப் பராமரிக்கப் பயன்படுத்தலாம் என்பது குறித்த தகவல்கள் இங்கே.

சருமத்திற்கு வாழைப்பழ தோல் பயன்படுத்தும் முறை:

  • சருமத்தில் முகப்பருக்கள், கருந்திட்டுகள், தோல் எரிச்சல் போன்ற பாதிப்புகளை கெமிக்கல் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் சரி செய்ய வாழைப்பழ தோல் சிறந்த தீர்வாக அமையும். இதற்கு வாழைப்பழத் தோலை அப்படியே முகத்தில் அப்ளை செய்யலாம்.

மேலும் படிக்க: சரும பராமரிப்பில் நீங்கள் செய்யும் தவறுகள்; இவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும்

  • வாழைப்பழத் தோலை சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். இதை மிக்ஸியில் மிக்ஸியில் பேஸ்ட் போன்று அரைத்துக் கொண்டு பேஸ் போன்று பயன்படுத்தலாம். 15 அல்லது 20 நிமிடங்களுக்கு பேஸ் பேக்குளை அப்ளை செய்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.
  • முகப்பருக்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் வாழைப்பழத்தோலை நன்கு அரைத்த பின்னதாக அதனுடன் சிறிதளவு தேன் கலந்துப் பயன்படுத்தவும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் உள்ள பாதிப்புகளைச் சரி செய்ய உதவியாக இருக்கும்.
  • வாரத்திற்கு இருமுறை வாழைப்பழத் தோலைக் கொண்டு பேசியல் செய்யலாம். அனைத்து சருமத்தினரும் ஏற்றதாக தான் அமையும். ஒருவேளை உங்களுக்கு ஒவ்வாமை பிரச்சனை இருக்கும் பட்சத்தில் கொஞ்சம் சோதித்து விட்டு பயன்படுத்துவது நல்லது.

மேலும் படிக்க: Winter Skin Care: குளிர்காலத்தில் உங்கள் முகத்தை வறண்டு போகாமல் பாதுகாக்க உதவும் டாப் 5 ஹோம்மேட் ஃபேஸ்பேக்


வாழைப்பழத்தோலில் உள்ள நன்மைகள்:

  • வாழைப்பழத்தோலில் உள்ள வைட்டமின்கள் ஏ, பி, ஈ மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் சருமத்தை எப்போதும் ஈரபபதமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் பருவ காலங்களில் ஏற்படக்கூடிய சரும எரிச்சல், சரும வறட்சி போன்றவற்றிற்குத் தீர்வாக உள்ளது.
  • வாழைப்பழத் தோலைப் பயன்படுத்தும் போது சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சரும சுருக்கங்களைப் போக்கவும், சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையையும் மேம்படுத்துகிறது.

Image source - Freepik

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com