how to make onion samosa

மொறுமொறுப்பான சுவையான வெங்காய சமோசா ரெசிபி! வீட்டிலேயே செய்யலாம்...

சமோசா மொறுமொறுன்னு வரலைன்னு கவலையா ? இந்த ரெசிபியை பின்பற்றுங்க... நீங்க எதிர்ப்பார்க்கிற மொறுமொறுப்பும் சுவையும் கிடைக்கும்.
Editorial
Updated:- 2024-07-22, 21:59 IST

டீ கடை முதல் பேருந்து நிலையம் வரை குறைவான விலையில் கிடைக்கும் வெங்காய சமோசா எனும் குட்டி சமோசா அனைவருக்குமே பிடித்தமானது. முன் ஒரு காலத்தில் தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சில கடைகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு சமோசா விற்கப்படும். சுவையும் நன்றாக இருக்கும். தற்போது நான்கு சமோசா 10 ரூபாய், ஐந்து சமோசா 10 ரூபாய் என விற்கப்படுகிறது. வீட்டில் தயாரிக்கும் பலருக்கு அதே மொறுமொறு சுவை கிடைப்பதில்லை. மாலை நேரத்தில் டீ அல்லது காபி குடிக்கும் போது இந்த குட்டி சமோசாவை கடிப்பதே தனி ருசி தான். வாருங்கள் மிக எளிதாக குட்டி சமோசாவை தயாரிக்கலாம்.

homemade onion samosa recipe

குட்டி சமோசா செய்யத் தேவையானவை

  • மைதா மாவு 
  • கோதுமை மாவு
  • வெங்காயம் 
  • உப்பு 
  • கறிவேப்பிலை
  • நல்லெண்ணெய் 
  • மிளகாய் தூள்
  • கரம் மசாலா
  • தண்ணீர்

குறிப்பு : 

குட்டி சமோசா செய்வதற்கு மாவு தயாரிப்பு மிக முக்கியம். 250 கிராம் அளவிற்கு முழுமையாக மைதா மாவு பயன்படுத்தலாம் அல்லது 125 கிராம் மைதா மாவு மற்றும் 125 கிராம் கோதுமை மாவு பயன்படுத்தலாம்.

மேலும் படிங்க ஆந்திரா ஸ்பெஷல் ஆவக்காய் ஊறுகாய்! ஒரு வருடத்திற்கு கெடாது...

வெங்காய சமோசா செய்முறை 

  • மாவுடன் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்துவிடுங்கள். அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மென்மையான பதத்திற்கு பிசையவும்.
  • ஐந்து நிமிடங்களுக்கு பிசைந்தால் போதுமானது. இதன் மீது கொஞ்சம் எண்ணெய் தடவி 10 நிமிடங்களுக்கு மூடி விடுங்கள். அப்படியே இருக்கட்டும்.
  • இதை பத்து உருண்டைகளாக பிரித்து பூரியை விட பெரிய சைஸிற்கு உருட்டவும்.
  • இதன் மீது மைதா மாவு தூவி விடுங்கள். பேனில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சமோசா மாவை 30 விநாடிகளுக்கு மிதமாக சூடுபடுத்தி எடுத்து விடுங்கள்.
  • அடுத்ததாக ஸ்டப்பிங் செய்வதற்கு பொடிதாக நறுக்கிய இரண்டு வெங்காயம், கறிவேப்பிலை, ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள், அரை டீஸ்பூன் கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
  • சமோசாவை முக்கோண வடிவில் மடித்து ஸ்டப்பிங் செய்யவும். சமோசாவில் இருந்து வெங்காயம் வெளியே வராமல் இருக்க கொஞ்சம் மைதா மாவை தண்ணீரில் கலந்து ஓரங்களில் ஒட்டவும்.
  • சமோசாவை மிதமான சூட்டில் எண்ணெய்-ல் பொறித்து எடுக்கவும். அதிகமான தீயில் பொறித்தால் சமோசா வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே சரியாக வேகாமல் இருக்கும். நீங்கள் விரும்பினால் ஸ்டப்பிங்கில் பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு சேர்க்கலாம்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். முகநூலில் பின்தொடர்வதற்கு HER ZINDAGI கிளிக் செய்யவும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com