ஆந்திரா ஸ்பெஷல் ஆவக்காய் ஊறுகாய்! ஒரு வருடத்திற்கு கெடாது...

ஆல் இன் ஆல் சைட் டிஷ் என்றால் அது ஊறுகாய் தான். அந்த வகையில் ஆந்திரா ஸ்பெஷல் ஆவக்காய் ஊறுகாய் செய்முறையை இந்த பதிவில் பார்க்கலாம்...

andhra avakkai pickle recipe

ஆவக்காய் ஊறுகாய் என்பது ஆந்திராவில் பிரபலமான மாங்காய் ஊறுகாய் வகைகளில் ஒன்றாகும். சில சமயங்களில் வீட்டில் எதுவுமே இல்லை என்றால் நாம் ஊறுகாய் தொட்டு சாப்பிடுவோம். பால் சாதம், தயிர் சாதம் மட்டுமல்ல கலவை சாதங்களுக்கும் ஏன் சப்பாத்திக்கு கூட ஊறுகாயை தொட்டு சாப்பிடலாம். இந்த ஊறுகாயில் அப்படியென்ன ஸ்பெஷல் என நீங்கள் கேட்கலாம். இதை தாளிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு வருடம் நிறைவடைந்தால் கூட கெட்டுப் போகாது. கடுகு, வெந்தய பொடி ஆவக்காய் ஊறுகாய்க்கு தனி சுவையை தரும். தெலுங்கு மொழி பேசும் அனைவரது வீட்டிலும் இந்த ஊறுகாயை கிலோ கணக்கில் தயாரித்து வைத்திருப்பார்கள்.

avakkai pickle in tamil

குறிப்பு :

ஆவக்காய் ஊறுகாய் செய்வதற்கு மாங்காய் தேர்வு மிகவும் முக்கியம். கடைகளில் ஆவக்காய் ஊறுகாய் போடுவதற்கு மாங்காய் கொடுங்கள் என கேட்டு வாங்குங்கள்.

ஆவக்காய் ஊறுகாய் செய்யத் தேவையானவை

  • மாங்காய்
  • மிளகாய் தூள்
  • உப்பு
  • மிளகு
  • வெந்தயம்
  • செக்கு நல்லெண்ணெய்
  • மஞ்சள் தூள்

ஆவக்காய் ஊறுகாய் செய்முறை

  • ஒரு கிலோ மாங்காயை பகடையை விட கொஞ்சம் பெரிய அளவுகளில் நறுக்கி கொள்ளவும். அதில் உட்புறம் இருக்கும் தோலை நீக்கி மாங்காயை ஒரு மணி நேரம் வீட்டிற்குள்ளேயே காய வைக்கவும்.
  • கால் லிட்டர் செக்கு நல்லெண்ணெய்யை ஒரு முறை சூடுபடுத்தி ஆற விடுங்கள்.
  • பெரிய பாத்திரத்தில் மாங்காயை பீஸ்களை எடுத்து 50 மில்லி லிட்டர் நல்லெண்ணெய்யை ஊற்றி ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு டாஸ் செய்யவும்.
  • மாங்காய் மீது எண்ணெய் ஊற்றாமல் உப்பு, மிளகாய் பொடி போட்டால் எளிதில் ஒட்டாது. அதுவே எண்ணெய் ஊற்றி உப்பு, மிளகாய் சேர்த்தால் மாங்காயுடன் கலந்து விடும்.
  • நாம் இதில் கல் உப்பு பயன்படுத்துவோம். இதை மிக்ஸியில் போட்டு பொடிதாக்கவும். இந்த ஊறுகாயில் பயன்படுத்தும் அளவுகள் 200 மில்லி லிட்டர் டம்ளரில் இருக்கும். டம்ளரில் முக்கால்வாசி கடுகு பொடியும், கால்வாசி வெந்தய பொடியும் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • இப்போது மாங்காயுடன் 200 மில்லி டம்ளரின் பாதியளவில் உப்பு, மிளகாய் தூள் மற்றும் கடுகு- வெந்தய பொடியை சேர்க்கவும்.
  • அடுத்ததாக மீதம் இருக்கும் உப்பு, மிளகாய் தூள், கடுகு- வெந்தய பொடியை போடுங்கள்.
  • கரண்டியின்றி கைகளில் பாத்திரத்தை குலுக்கினால் போதும். இறுதியாக 150 மில்லி லிட்டர் நல்லெண்ணெய்யை ஊற்றுவிட்டு மூன்று நாட்களுக்கு ஊறவிடுங்கள்.
  • மூன்று நாட்களில் மாங்காயில் உப்பு, காரம் நன்கு ஊறி எண்ணெய் வெளியேறும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். முகநூலில் பின்தொடர்வதற்கு HER ZINDAGI கிளிக் செய்யவும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP