pavakkai kuzhambu recipe

Pavakkai Pitlai Recipe : பாவக்காய் பிடிக்காதவங்க கூட இந்த குழம்பை கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க!

பாகற்காய் எப்படி செய்தாலும் கசப்பாக இருக்கிறதா? துளி கூட கசப்பு தெரியாது, ஒரு முறை இப்படி பாகற்காய் பிட்லை செஞ்சு பாருங்க…
Editorial
Updated:- 2023-06-09, 18:07 IST

வீட்டில் உள்ளவர்களை பாகற்காயை சாப்பிட வைப்பது கொஞ்சம் கடினமான காரியம் தான். ஒரு சிலரின் குணாதிசயத்தை என்ன செய்தாலும் மாற்ற முடியாது. அதே போல தான் இந்த பாகற்காயில் வெல்லம் சேர்த்தாலும் சரி, புளி சேர்த்தாலும் சரி எங்கோ ஒரு மூளையில் இருந்து கசப்பு சுவை எட்டி பார்க்க தான் செய்யும். ஆனால் எவ்வளவு கசப்பாக இருந்தாலும், உடம்புக்கு ரொம்ப நல்லது ஆயிற்றே! வேண்டாம் என்று ஒதுக்கவும் முடியாது.

நீங்கள் இனி பாகற்காயை கஷ்டப்பட்டு சாப்பிடவும் வேண்டாம் அல்லது கசப்பாக இருக்கும் என்பதால் ஒதுக்கி விடவும் வேண்டாம். பாகற்காயின் கசப்பு சுவை துளி கூட தெரியாத வகையில் ஒரு அருமையான குழம்பு ரெசிபியை இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம். குழந்தைகள் கூட இந்த குழம்பை நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் ஒரு முறை செய்து சுவைத்து பாருங்கள். பாகற்காய் பிட்லை செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: காலை உணவுக்கு அவல் பொங்கல் செய்து அசத்துங்க! உப்புமா செய்வதை விட இது ஈஸி!

 

தேவையான பொருட்கள் 

pavakkaai pitlai recipe

  • பெரிய வெங்காயம் - 1
  • பாகற்காய்  - 1
  • துவரம் பருப்பு - ½ கப் 
  • எண்ணெய் - 1 டீஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு 
  • புளி - சிறிய நெல்லிக்காய் அளவு  
  • வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன் 
  • மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
  • தனியா தூள் - 2 டேபிள் ஸ்பூன் 
  • மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
  • கொத்தமல்லி - சிறிதளவு  

தாளிக்க தேவையான பொருட்கள்

  • எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
  • கடுகு - 1 டீஸ்பூன் 
  • உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் 
  • கறிவேப்பிலை - சிறிதளவு 
  • தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன் 

செய்முறை 

paavakkai recipes

  • ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். இதனுடன் வெங்காயம் மற்றும் பாகற்காய் சேர்த்து ஐந்து நிமிடத்திற்கு வதக்கிக் கொள்ளவும். 
  • இப்போது ஒரு பிரஷர் குக்கரில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள துவரம் பருப்பை சேர்க்கவும். இதனுடன் வதக்கி வைத்துள்ள வெங்காயம், பாகற்காய் கலவை மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். 4-5 விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். 
  • பிரஷர் தானாக அடங்கிய பிறகு பருப்பு மற்றும் காய்கறிகளை லேசாக மசித்து கொள்ளவும். 
  • இப்பொழுது பருப்பு காய்கறி கலவையை மீண்டும் சூடாக்கவும், இதனுடன் உப்பு, புளி, தண்ணீர், மஞ்சள் தூள், தனியா தூள்  மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். 
  • இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும். 
  • இப்போது தாளிப்பதற்கு ஒரு கடாய் அல்லது தாளிப்பு கரண்டியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். இதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும். 
  • இதை குழம்புடன் சேர்த்து நன்கு கலக்கவும். இறுதியாக வெல்லம் சேர்த்து அடுப்பை அணைக்கவும். 
  • கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும். உண்மையில் இந்த பாகற்காய் பிட்லையில் பாகற்காயின் கசப்பு சுவை தனித்துவமாக தெரியாது. நீங்களும் இதை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள்.

 

இந்த பதிவும் உதவலாம்: பிரியாணினா இப்படி இருக்கனும், நீளமா உதிரி உதிரியா பக்குவமா செஞ்ச வெஜிடபிள் பிரியாணி! 

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம். 

image source:freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com