herzindagi
image

கேரட் ஜூஸ் ஒன்று போதும்; இத்தனை நன்மைகளை எளிதில் பெற்றுவிட முடியும்!

கேரட்டில் உடலுக்கு ஆற்றலை அளிக்கும் வகையிலான பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது முதல் கண்பார்வை மேம்பாடு, மலச்சிக்கலுக்கத் தீர்வு, இதய நோய் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது.
Editorial
Updated:- 2025-10-31, 22:01 IST


கேரட்.. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பச்சையாக விருப்பத்துடன் சாப்பிட வேண்டிய காய்கறிகளில் முக்கியமானது. சிறு வயதில் இருக்கும் போதெல்லாம் கேரட் சாப்பிடு, கண் நல்லா தெரியும் என்ற வார்த்தையை அதிகளவில் கேள்விப்பட்டிருப்போம். அந்தளவிற்கு பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. தினமும் அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது கேரட்டை உட்கொள்ளும் போது கண் பார்வை மேம்படுவதோடு பல்வேறு உடல் நல பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது. இதோ என்னென்ன? என்பது குறித்த செய்முறை விளக்கம் இங்கே..

மேலும் படிக்க: உடல் எடையைக் குறைக்க முடியவில்லையா?  இந்த 5 தவறுகள் முக்கிய காரணமாக இருக்கலாம்


கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

கேரட்டை பொரியல் செய்து சாப்பிடுவதைக் காட்டிலும் தினமும் ஜூஸாக செய்து பருகும் போது அதில் உள்ள அத்துணை ஊட்டச்சத்துக்களையும எளிதில் பெற முடியும். இதோ அவற்றில் சில இங்கே.

  • மலச்சிக்கலுக்குத் தீர்வு: கேரட்டில் கரையும் மற்றம் கரையா நார்ச்சத்துக்கள் இரண்டுமே அதிகளவில் உள்ளதால் எனவே ஜூஸாக செய்து பருகும் போது எளிதில் செரிமானம் ஆகக்கூடும். குறிப்பாக இதில் உள்ள நார்ச்சத்துக்கள் வளர்சிதை மாற்றத்தை சீராக்குவதோடு மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்க உதவுகிறது.

 

  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: கேரட்டில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் அதிகளவில் உள்ளது. கேரட் மற்றும் நெல்லிக்காய் இரண்டையும் கலந்து ஜூஸாக பருகும் போது இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்டகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
  • கேரட்டில் பீட்டா கரோட்டின், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் பண்புகள் அதிகளவில் உள்ளதால் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிப்பதோடு இதய நோய் உள்ளிட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது.

மேலும் படிக்க: தினமும் இரவு 8 மணி நேரம் உறங்குவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?

  • கேரட்டில் அதிகளவு நீரச்ச்த்துக்கள் உள்ளதால் உச்சந்தலையில் ஏற்படக்கூடிய வறட்சியைத் தடுப்பதோடு முடி கொட்டுதல், பொடுகு பிரச்சனைகளையும் சரிசெய்ய உதவுகிறது.

Image source - Freepik

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com