herzindagi
image

மஞ்சளிலும் கலப்படம் உள்ளதா? எளிய முறையில் கண்டறிய இந்த முறைகளைப் பின்பற்றுங்க!

மஞ்சளில் உள்ள குர்குமின் உள்ளிட்ட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல்வேறு ஆற்றலை அளிக்கிறது.
Editorial
Updated:- 2025-11-02, 23:48 IST

இந்தியர்களின் சமையல் அறையில் மிகவும் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது மஞ்சள் தூள். குறிப்பாக தமிழர்கள் மஞ்சளை சமையலுக்காக மட்டுமல்ல, சமைக்கும் போது சிறியதாக அடிபட்டாலும், சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற வைரஸ் தொற்று பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதற்கு முன்னதாக மஞ்சள் தூளைத் தான் பயன்படுத்துவார்கள். இதில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை அளித்து பாதிப்புகளைத் தவிர்க்க உதவுகிறது. இப்படி அனைவரது வீடுகளிலும் பிரதான மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படும் மஞ்சளில் அதீத கலப்படம் உள்ளதாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் எப்படி மஞ்சளில் உள்ள கலப்படத்தை எளிய முறையில் வீட்டிலேயே கண்டறிய முடியும்? என்பது குறித்த எளிய டிப்ஸ்கள் இங்கே.


மேலும் படிக்க: பெண்கள் வயதுக்கு ஏற்ப தங்களை தங்காளே பராமரித்து கொள்ள செய்ய வேண்டியவை


கலப்பட மஞ்சளைக் கண்டறியும் வழிமுறைகள்:

மஞ்சள் தூளிலில் கலப்படம் உள்ளதா? என்பதைக் கண்டறிய முதலில் மஞ்சள் பொடியின் நிறத்தைக் கவனிக்க வேண்டும். சுத்தமான மஞ்சள் தூள் என்றால், பார்ப்பதற்கு தங்க மஞ்சள் நிறத்தோடும் சொரசொரப்பின்றி இருக்கும். அதுவே ஏதாவது கலப்படம் செய்யப்பட்ட மஞ்சள் தூள் என்றால், பார்ப்பதற்கு மஞ்சள் தூள் சற்று மங்களாக இருக்கும். கையில் தொடும் மஞ்சள் கறை கையில் ஒட்டாது. அதுவே சுத்தமான மஞ்சள் என்றால் தொட்டவுடன் கைகளில் லேசாக மஞ்சள் நிறம் இருக்கும்.

மேலும் படிக்க: பெண்களிடையே அதிகரிக்கும் கூந்தல் தொடர்பான பிரச்சனைகள்; முடி உதிர்வுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

கலப்படமான மஞ்சளைக் கண்டறிய ஒரு டம்ளரில் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூளைப் போட்டு சோதனை செய்துப்பார்க்கலாம். ஆம் தண்ணீரில் மஞ்சள் தூளை 10 முதல் 15 நிமிடங்களுக்கு அப்படியே வைத்துவிடும் போது சுத்தமான மஞ்சள் கீழே படிந்துவிடும். அதுவே கலப்படமான மஞ்சள் தூள் என்றால் ஆங்காங்கே திட்டு திட்டாக படிந்துவிடும். இதோ தண்ணீரும் கொஞ்சம் மங்கலாக தெரியக்கூடும்.

 

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com