காரசாரமான காரைக்குடி பச்சை மிளகாய் தொக்கு! காய்ச்சலுக்கு நல்ல மருந்து...

காய்ச்சல் பாதிப்புக்கு கஞ்சி குடிக்கும் போது இந்த பச்சை மிளகாய் தொக்கு சேர்த்து சாப்பிடுங்கள். காய்ச்சலில் இருந்து விரைவாக குணமடைவீர்கள்.

green chilli thokku

ஆரோக்கியம் நிறைந்த உணவு செய்முறையில் நாம் அடுத்ததாக பார்க்கப் போவது காரசாரமான காரைக்குடி பச்சை மிளகாய் தொக்கு. என்ன டா பச்சை மிளகாய் ஆரோக்கியத்திற்கு நல்லதா என நீங்கள் கேட்கலாம். ஆம், பச்சை மிளகாயில் மருத்துவ குணங்கள் உள்ளன. இதை வெறுமனே சாப்பிட முடியாது. காரத்தை குறைத்து எண்ணெய்-ல் தாளித்து தயார் செய்தால் பல நாட்களுக்கு கெடாது. இது மிகவும் ஈஸியான ரெசிபி. 15 நிமிடங்களில் தயாரித்து விடலாம். இதை நீங்கள் மாதக்கணக்கில் ப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்.

green chilli thokku recipe

பச்சை மிளகாய் தொக்கு செய்யத் தேவையானவை

  • பச்சை மிளகாய்
  • பெருங்காயம்
  • கடலெண்ணெய்
  • நல்லெண்ணெய்
  • கல் உப்பு
  • கடுகு
  • கறிவேப்பிலை
  • தண்ணீர்
  • புளி
  • குண்டு மிளகாய்
  • வெல்லம்

பச்சை மிளகாய் தொக்கு செய்முறை

  • முதலில் 150 கிராம் பச்சை மிளகாயை தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு பொடிதாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எட்டு ஸ்பூன் கடலெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.
  • மிளகாயை அப்படியே சாப்பிட்டால் பச்சையாக தெரியும் காரம் அதை எண்ணெய்-ல் வறுத்தால் குறையும்.
  • அடுத்ததாக 10 குண்டு மிளகாய் எடுத்து அதற்குள் இருக்கும் விதைகளை நீக்கி கடாயில் போடுங்கள்.
  • பச்சை மிளகாய், குண்டு மிளகாய் நன்கு வறுபட்டவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு 50 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல அரைக்கவும்.
  • அதே கடாயில் மீதம் இருக்கும் எண்ணெய்-ல் ஒரு ஸ்பூன் கடுகு, கொஞ்சம் கறிவேப்பிலை, அரை ஸ்பூன் பெருங்காயத் தூள் போடுங்கள்.
  • கடுகு பொறிந்தவுடன் மிக்ஸியில் அரைத்த மிளகாய் பேஸ்ட்டை சேர்க்கவும். இன்னும் கொஞ்சம் 50 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்க்கலாம்.
  • இப்போது நன்கு கொதிக்கட்டும். இதனிடையே தேவையான அளவு கல் உப்பு மற்றும் 25 கிராம் புளியை 50 மில்லி லிட்டர் சுடு தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்.
  • இதன் பிறகு ஒரு டீஸ்பூன் பவுடர் வெல்லம் சேருங்கள். நன்றாக கொதித்தவுடன் எண்ணெய் பிரிந்து தொக்கு நிறம் பச்சையில் இருந்து சிவப்புக்கு மாறி இருக்கும்.
  • இறுதியாக இரண்டு ஸ்பூன் நல்லண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்து தண்ணீர் படாத இடத்தில் வைக்கவும்.
  • இதை நீங்கள் தயிர் சாதத்துடன் தொட்டு அல்லது சாதத்துடன் பிரட்டி சாப்பிடலாம். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது கஞ்சியுடன் சேர்த்து சாப்பிடுங்கள். விரைவில் குணம் அடைவீர்கள்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். எங்களை முகநூலில் பின்தொடர்வதற்கு HER ZINDAGI கிளிக் செய்யவும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP