herzindagi
image

இந்த 3 பொருட்கள் போதும்; இயற்கையான முறையில் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம்!

பூண்டு, பால் மற்றும் தேன் கலந்து பால் காய்ச்சிக் குடிக்கும் போது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க முடியும்.  
Editorial
Updated:- 2025-10-26, 23:15 IST

தாய்ப்பால் என்பது பிறந்த குழந்தைகளுக்குக் கிடைக்கும் அமிர்தம். இதை முறையாக பயன்படுத்தாவிடில் இளம் வயதில் இருந்து குழந்தைகள் பல உடல் நல பிரச்சனைகளுக்கு உள்ளாக நேரிடும். ஆம் பிறந்த தினம் முதல் தொடர்ந்து 2 அல்லது 3 வயது வரை கட்டாயம் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்தாக ஆக வேண்டும். எந்தளவிற்கு குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கிறீர்களோ? அந்தளவிற்கு அவர்களின் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் வலுவுடன் இருக்கும். ஆனால் அனைத்துத் தாய்மார்களுக்கும் தாய்ப்பால் சுரப்பு சீராக இருக்குமா? என்றால் நிச்சயம் கிடையாது.

மேலும் படிக்க: குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க; இந்த 5 டிப்ஸ் உங்களுக்கு உதவலாம்

 

குழந்தைகள் பிறந்த முதல் ஒரு மாத காலத்திற்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்காது. இன்றைய காலக்கட்டத்தில் இதற்காக நிறைய இளம் தாய்மார்கள் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மாத்திரை எடுத்துக் கொள்கிறார்கள். இவற்றைத் தவிர்க்க நினைப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இயற்கையான முறையில் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். இதற்கு சிறந்த தேர்வாக உள்ளது பூண்டு. இதனால் தான் குழந்தை பிறந்தவுடன் தாய்மார்களுக்கு அதிகளவில் பூண்டு சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இன்றைக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும் பூண்டு பால் எப்படி செய்வது? என்பது குறித்து அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

 

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் பூண்டு பால்:

  • இயற்கையான முறையில் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் முதலில் பூண்டு, பால் மற்றும் தேன் போன்றவற்றைத் தயார் நிலையில் எடுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை காய்ச்சவும். ஓரளவிற்கு காய்ச்சி வந்ததும் பூண்டு பற்களை இதில் தட்டிப்போட்டு கொதிக்க விடவும்.

மேலும் படிக்க: குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது பெற்றோர்கள், இந்த தவறுகளை கட்டாயம் செய்யக்கூடாது

  • பூண்டு கையில் எடுத்துப் பார்த்தால் நசுங்கும் அளவிற்கு வரும் வரை பாலை நன்கு காய்ச்சிக் கொள்ளவும்.
  • இதையடுத்து பாலை ஒரு டம்ளருக்கு மாற்றிய பின்னதாக இதனுடன் சிறிதளவு தேன் கலந்து பருகவும்.

குழந்தையைப் பெற்றெடுத்த தாய்மார்கள் தினமும் பூண்டு, பால் மற்றும் தேன் கலந்து தயார் செய்யப்படும் பாலைப் பருகினால் போதும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் இயற்கையான முறையில் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும். தேன் கலந்து சாப்பிட பிடிக்கவில்லையென்றால், பாலுடன் கருப்பட்டி சேர்த்து பருகும் போது முதுகு வலி கொஞ்சம் குறையக்கூடும்.

Image source - Freep

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com