எலும்புகளை வலுப்படுத்தும் ஆரோக்கியம் நிறைந்த எள்ளு லட்டு!

எள்ளில் கால்சியம், இரும்பு சத்து, வைட்டமின் ஏ, பி, பொட்டாசியம், புரதம், மெக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. 

ellu laddu recipe making...

இன்றைய உணவு முறையில் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருவதால் பல நோய் பாதிப்புகளையும் நாம் விலைக்கொடுத்து வாங்குகிறோம். என்ன தான் விதவிதமான உணவுகளாக இருந்தாலும் பராம்பரிய உணவுகளுக்கு ஈடு இணை எதுவும் இருக்காது. குறிப்பாக இன்றைக்கு குழந்தைகள் மிட்டாய், சாக்லேட்டுகள், பப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதற்கு அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். இதெல்லாம் அந்த நேரத்திற்கு மட்டும் சுவையைக் கொடுக்கும். ஆனாலும் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என்றால், சிறுதானியங்கள், பயறு வகைகளைக் கொண்டு செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் வகைகளுக்கு கொஞ்சம் மாற வேண்டும். இதோ இன்றைக்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் லிஸ்டில் இருக்கும் எள்ளு லட்டு ரெசிபி எப்படி செய்வது? இதற்கு என்னென்ன பொருட்கள்தேவை? என்பது குறித்த தகவல்கள் இங்கே.

seasme

ஆரோக்கியம் அளிக்கும் எள்ளு லட்டு ரெசிபி:

தேவையான பொருட்கள்:

  • எள்ளு - 300 கிராம்
  • வெல்லம் - 500 கிராம்
  • வேர்க்கடலை - 300 கிராம்
  • தேங்காய் துருவல் - 300 கிராம்
  • ஏலக்காய் தூள் - சிறிதளவு

செய்முறை:

  • மேற்கூறியுள்ள பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எள்ளைப் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். எள்ளு சீக்கிரம் கருகிவிடும் என்பதால் அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும். பொன்னிறமாக வந்தவுடன் மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றிவிடவும்.
  • இதையடுத்து அதே கடாயில் வேர்க்கடலையை தோல் நீக்கி ஒரு 3 நிமிடங்களுக்கு வறுத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும். பின்னர் அதே கடாயில் துருவிய தேங்காயையும் பொன்னிறத்திற்கு வறுத்துக் கொள்ளவும். இவற்றை நன்கு காய வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் முதலில் வறுத்த எள், வறுத்த வேர்க்கடலையை மட்டும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வறுத்த தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தூள் போன்றவற்றை லேசாக அரைத்துக் கொள்ளவும்.
yellu laddu
  • இதனுடன் சிறிதளவு துருவிய வெல்லம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இவற்றை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி சிறிதளவு நெய் ஊற்றி அனைத்தையும் பிசைந்துக் கொள்ள வேண்டும். லட்டு பிடிக்கும் பதத்திற்கு வரும் வரை பிசைந்து விட்டு சிறிய சிறிய லட்டுகளாக பிடித்து எடுத்தால் போதும். சுவையான மற்றும் ஆரோக்கியமான எள்ளு லட்டு ரெடி. இதை ஒரு டப்பாவில் அடைத்து வைத்து பள்ளி சென்று வரும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். சுவையோடு ஆரோக்கியத்தையும் அவர்கள் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

எள்ளில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்:

எள்ளில் கால்சியம், இரும்பு சத்து, வைட்டமின் ஏ, பி, பொட்டாசியம், புரதம், மெக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது. மேலும் கால்சியம் சத்துக்கள் அதிகளவில் இருப்பதால் எலும்புகள் உறுதியுடன் இருப்பதற்கு உதவியாக இருக்கும்.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP