herzindagi
garlic thokku for rice quick recipe

Fried Garlic Thokku: பூண்டை வறுத்து இந்த மாதிரி தொக்கு செஞ்சு பாருங்க, வேற லெவல் டேஸ்ட்!

உங்களுக்கு பூண்டின் சுவை பிடிக்கும் என்றால் இந்த பூண்டு தொக்கு ரெசிபியை கட்டாயமாக ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்…
Editorial
Updated:- 2023-07-07, 14:41 IST

பொதுவாக குழம்பு போன்ற உணவு வகைகளில் சேர்க்கப்படும் பூண்டை விட நல்லெண்ணையில் வதக்கிய பூண்டு, பூண்டு சேர்த்த கார்லிக் பிரட், பூண்டு சட்னி போன்றவற்றில் பூண்டின் சுவை மற்றும் மணம் அற்புதமாக இருக்கும். பூண்டை இவ்வாறு வதக்கிய பின் சமைத்து சாப்பிட்டால் அதன் சுவை அற்புதமாக இருக்கும். 

எப்போதும் செய்யும் பூண்டு சட்னிக்கு பதிலாக, பூண்டை வதக்கி இதுபோல தொக்கு செய்து பாருங்கள். இதன் சுவை உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும். இந்த தொக்கு செய்வதற்கு நல்ல தரமான பூண்டை பயன்படுத்துங்கள். முளைவிட்ட பூண்டுகளை பயன்படுத்த வேண்டாம். மேலும் அரைப்பதற்கு மிளகாய் பொடிக்கு பதிலாக காய்ந்த மிளகாயை பயன்படுத்துங்கள். இப்போது பூண்டு தொக்கு செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை பார்க்கலாம் 

 

இந்த பதிவும் உதவலாம்: புரதம் நிறைந்த அடை தோசை, ஒரே மாவில் 2 டிபன் ரெடி! 

 

தேவையான பொருட்கள் 

fresh garlic thokku

  • நல்லெண்ணெய் - ¼ கப்
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
  • பெருங்காயம் பூண்டு -1 சிட்டிகை 
  • தேங்காய் -¼ கப்
  • பூண்டு 15-20
  • தக்காளி - 1
  • காய்ந்த மிளகாய் 3-5
  • புளி- 1 சிறிய நெல்லிக்காய் அளவு 
  • மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு
  • வெல்லம் - ½ டீஸ்பூன் 

செய்முறை 

garlic recipes

  • முதலில் பூண்டை தோலுரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
  • அடுத்ததாக புளியை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். 
  •  அடுப்பை குறைந்த தீயில் வைத்து தோல் உரித்த பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
  • பூண்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்கி தனியாக வைக்கவும்.
  • இப்போது ஒரு மிக்ஸர் ஜாரில் துருவிய தேங்காய், ஒரு நறுக்கிய தக்காளி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • இப்போது கடாயில் புளி தண்ணீரை ஊற்றி மஞ்சள் பொடி, உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க விட வேண்டும்.
  • இதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி-தேங்காய் விழுது சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • அடுத்ததாக வதக்கி வைத்துள்ள பூண்டு சேர்த்து மூன்று நிமிடங்களுக்கு வதக்க வேண்டும்.
  • எண்ணெய் பிரிந்து வரும் பொழுது அடுப்பை அணைக்கவும். இந்தப் பூண்டு தொக்கை தோசை அல்லது சூடான சாதத்துடன் சாப்பிடலாம். அட்டகாசமான இந்த பூண்டு தொக்கு ரெசிபியை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

 

இந்த பதிவும் உதவலாம்: சாம்பார் பாதி குருமா பாதி, இனி இட்லி தோசைக்கு இது தான் பெஸ்ட் காம்பினேஷன்!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com