herzindagi
how to make adai dosa easily

Healthy Breakfast Recipes : புரதம் நிறைந்த அடை தோசை, ஒரே மாவில் 2 டிபன் ரெடி!

காலையில் எடுத்துக்கொள்ளும் உணவானது புரதம் நிறைந்ததாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் ஒரு ஹெல்தியான அடை தோசை ரெசிபியை இன்றைய பதிவில் பார்க்கலாம்…
Editorial
Updated:- 2023-07-05, 15:46 IST

மொறுகளான தோசைக்கு பல பிரியர்கள் இருந்தாலும் இது போன்ற அடை தோசை பலருக்கும் பிடிப்பதில்லை. இப்பதிவில் பகிரப்பட்டுள்ள சில குறிப்புகள் மற்றும் செய்முறையை முறையாக பின்பற்றினால் நிச்சயமாக உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இந்த தோசையை விரும்பி ரசித்து சாப்பிடுவார்கள். இதில் சேர்க்கப்பட்டிருக்கும் அரிசி, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு என எல்லா பொருட்களுமே ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தரக்கூடியவை. இந்த தோசையை சற்று தடிமனாக அடை போல ஊற்றி சாப்பிடலாம் அல்லது நீர்க்க கரைத்து மொறுகளான தோசையாகவும் ஊற்றி சாப்பிடலாம்.

அடை தோசைக்கு அவியல்,சாம்பார் அல்லது தேங்காய் சட்னி உடன் பரிமாறலாம் அல்லது குழந்தைகளை போல நெய் மற்றும் வெல்லம்/ சர்க்கரை சேர்த்தும் சாப்பிடலாம். இப்போது அடை தோசை மாவு தயாரிப்பதற்கான முறையை தெரிந்து கொள்வோம்.

 

இந்த பதிவும் உதவலாம்: சைவ நாட்களில், இது போல வெஜிடேரியன் மீன் வறுவல் செய்து அசத்துங்க!

 

தேவையான பொருட்கள் 

adai dosai recipe

  • பச்சரிசி - 1 கப் 
  • இட்லி அரிசி - 1 கப் 
  • கடலை பருப்பு - ¼ கப் 
  • துவரம் பருப்பு - ¼ கப் 
  • பாசிப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு வெங்காயம் - 1
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • காய்ந்த மிளகாய் 2-3
  • பெருங்காயம் - ¼ டீஸ்பூன்
  • சோம்பு - 1 டீஸ்பூன்
  • தேங்காய் - தேவையான அளவு 

செய்முறை 

tiffin recipes

  • முதலில் பச்சரிசி இட்லி அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு மற்றும் பாசிப்பருப்பை தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். 
  • இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து 2-3 மணி நேரங்களுக்கு ஊற வைத்துக் கொள்ளலாம். 
  • பின்னர் ஒரு மிக்ஸர் ஜாரில் ஊற வைத்த அரிசி பருப்பு கலவை காய்ந்த மிளகாய், பெருங்காயம், சோம்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். 

ரெசிபி 1: அடை தோசையாக செய்ய விருப்பப்படுபவர்கள் மாவை கெட்டியான பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் பொடியாக நறுக்கிய தேங்காய், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்ந்து கலந்து அடையாக சுட்டெடுக்கலாம். 

ரெசிபி 2: இதை மொறுகளான தோசையாக சாப்பிட விருப்பம் உள்ளவர்கள் தண்ணீர் ஊற்றி ரவை தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவு சற்று நீர்க்க இருக்க வேண்டும். நீங்கள் விரும்பினால் இதிலும் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை கொத்தமல்லி மற்றும் தேங்காய் சேர்த்துக் கொள்ளலாம். இந்த மாவை தோசை கல்லின் ஓரத்தில் இருந்து தொடங்கி சுற்றி ஊற்ற வேண்டும். தோசை மொறுகள் ஆக மாறும் வரை வேக விட்டு சட்னி, சாம்பார் அல்லது அவியல் உடன் பரிமாறலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: பட்டாணியின் தோலை வைத்து இப்படியும் சமைக்கலாமா! இனி தோல்களை தூக்கி எறியாதீங்க! 

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம். 

image source:freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com