ஆரோக்கியம் அளிக்கும் முள்ளங்கி சப்பாத்தி ரெசிபி டிப்ஸ்!

முள்ளங்கியில் வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் பி6, கால்சியம், பாஸ்பரஸ், தாது உப்புகள் போன்ற  ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

radish chapti recipe making

குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் ஆரோக்கியம் அளிக்கக்கூடிய உணவுகள் தான் இன்றைய அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. என்ன தான் தினமும் சாப்பாடு, இட்லி, தோசை, பொங்கல், போன்ற ரெசிபிகள் சாப்பிட்டாலும் ஆரோக்கியம் அளிக்கும் காய்கறிகளையும் உணவு முறையில் சேர்த்துக் கொள்வது நல்லது. இல்லையென்றால் உடலுக்குத் தேவையான ஆற்றல்கள் கிடைக்காமல் இருப்பதோடு நாள் முழுவதும் சோர்வின்றி இருக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

இந்த நிலையில் தான் வீட்டில் உள்ள ஒவ்வொரு அம்மாக்களும் குழந்தைகளுக்கு என்ன உணவுகள் சமைக்கலாம்? என்ற யோசனை அதிகளவில் இருக்கும். இதோ உங்களுக்காகவே இன்றைக்கு ஆரோக்கியத்துடன் ருசியை அளிக்கும் வகையிலான முள்ளங்கி சப்பாத்தி ரெசிபி எப்படி செய்யலாம்? என்பது குறித்த முழு விபரம் இங்கே...

chapathi

ஆரோக்கியம் அளிக்கும் முள்ளங்கி சப்பாத்தி:

தேவையான பொருட்கள்:

  • கோதுமை மாவு - 2 கப்
  • முள்ளங்கி - 2
  • பச்சை மிளகாய் - 3
  • கொத்தமல்லி இலை- சிறிதளவு
  • மிளகாய் தூள் - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - சிறிதளவு
  • உப்பு- சுவைக்கு ஏற்ப

செய்முறை:

  • முள்ளங்கி சப்பாத்தி ரெசிபி செய்வதற்கு முதலில் முள்ளங்கியை நன்கு கழுவிய பின்னதா தோல் சீவி, துருவிக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் மற்றொரு பாத்திரத்தில் சப்பாத்தி மாவுடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்ந்து மாவு பதத்திற்கு நன்கு கலந்துக் கொள்ளவும்.
  • இதில் சப்பாத்தி மாவு பிசைவதற்கு தண்ணீருக்குப் பதிலாக, முள்ளங்கி சாறையும் கலந்து பிசையும் போது தனிச்சுவையை உங்களுக்குக் கிடைக்கும்.
  • இதையடுத்து சப்பாத்திக்காக பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக்கி சப்பாத்திக்காக உருட்டும் போது , அதனுடன் துருவிய முள்ளங்கியை வைத்தும் தட்டையாக உருட்டிக் கொள்ளவும்.
  • பின்னதாக ஒரு தோசைக்கல்லில் திரட்டிய சப்பாத்தியைப் போட்டு சுட்டெடுத்தால் போதும் சுவையான முள்ளங்கி சப்பாத்தி ரெடி. இந்த ரெசிபியை வாரத்திற்கு இருமுறையாவது செய்துக் கொடுக்கவும். நிச்சயம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இதோடு அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் எளிதில் பெற உதவியாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு சுவையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றால் கேரட் துருவல் மற்றும் ஓமம் சேர்த்துக் கொண்டால் சுவை அதிகரிக்கும்.

முள்ளங்கியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

முள்ளங்கியில் வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் பி6, கால்சியம், பாஸ்பரஸ், தாது உப்புகள் போன்ற பல்வேறு உடலுக்கு ஆற்றலை அளிக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவற்றை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது, நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகப்படுவதோடு உடலுக்குத் தேவையான ஆற்றலையும் அளிக்கிறது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP