கழுத்து கருப்பாகி உங்களது அழகைக் கெடுக்கிறதா? சட்டென்று மறைய இதைப் பின்பற்றுங்கள்

ஹார்மோன் பிரச்சனைகள், சூரிய ஒளி தாக்குதல், வைட்டமின் சி குறைபாடு போன்ற பல்வேறு பிரச்சனைகளால் பெண்களுக்கு கழுத்தைச் சுற்றி கருப்பாக ஏற்படுகிறது.
image
image

பெண்கள் எப்போதும் தங்களது முகத்தை பிரகாசமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். பவுடர் அல்லது க்ரீம் ஏதாவது உபயோகிக்கும் போது முகத்தில் மட்டும் தான் அதீத கவனம் செலுத்துவார்கள். கழுத்து பகுதியை அப்படியே விட்டு விடுவார்கள். இது முற்றிலும் தவறு. முகத்தைப் பராமரிக்க அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும் போது கொஞ்சம் கழுத்திற்கும் கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் கழுத்து பகுதி முழுவதும் கருப்பாக தோன்றி அழகைக் கெடுத்து விடும். இதற்கு ரெம்ப சிரமப்பட வேண்டும். வீட்டில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களைக் கொண்டு உங்களது அழகைப் பராமரிக்க முயற்சி செய்யுங்கள். இதோ அவற்றில் சில உங்களுக்காக.


கழுத்துக் கருமையைப் போக்கும் எளிய வழிமுறைகள்:

கழுத்தில் ஏற்படக்கூடிய கருமையை சரி செய்வதற்கு அழகு நிலையங்களுக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்வது முதல் டெர்மட்டாலஜி சிகிச்சைகள் என பல வழிமுறைகள் இருந்தாலும் எவ்வித பக்கவிளைவுகள் இல்லாமல் சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் வரக்கூடும்.

மஞ்சள் பயன்பாடு:

  • ஒரு பாத்திரத்தில் மஞ்சளை தண்ணீர் அல்லது பாலில் கலந்து பேஸ் பேக் போன்று தயார் செய்துக் கொள்ளவும்.
  • இதை கழுத்தில் கருப்பாக உள்ள இடங்களில் தடவி சுமார் 15 முதல் 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். இதையடுத்து குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால் போதும்.
  • மஞ்சலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் சருமத்தைப் பிரகாசமாக்க உதவுகிறது. பாலில் ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளதால் சருமத்தை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.

மேலும் படிக்க:சருமத்தை பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இந்த ஆயுர்வேத ஃபேஸ்பேக்கை ட்ரை பண்ணுங்க

கழுத்துக் கருமைக்கு கற்றாழை:

  • கழுத்தில் கருப்பான இடங்களில் கற்றாழை ஜெல்லை எடுத்து தேய்த்துக் கொள்ளவும்.
  • விரல்கள் கழுத்தைச் சுற்றி நன்கு மசாஜ் செய்த பின்னதாக அப்படியே விட்டு விட வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரால் லேசாக துடைத்தெடுத்தால் போதும்.
  • கற்றாழையில் உள்ள ஆன்டி ஆக்ஸி்டென்ஸ் கழுத்தில் உள்ள கருப்பை நீக்கவும், இறந்த செல்களை அகற்றி எப்போதும் பிரகாசமாக இருக்க உதவுகிறது.


கழுத்துக் கருமைக்குத் தயிர்:

கழுத்தில் ஏற்பட்டுள்ள கருப்பான இடங்களைப் போக்கி புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்றால் அப்பகுதிகளில் தயிரைப் பயன்படுத்துவது நல்லது. இதில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் எப்போதும் சருமத்தைப் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.

இதுபோன்ற முறைகளைப் பின்பற்றினாலும், கழுத்தில் உள்ள கருப்பான இடங்களைப் போக்குவதற்கு சரிவிகித உணவுகளை உட் கொள்ள வேண்டும். ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வைட்டமின் குறைபாடு காரணமாக கழுத்தில் கருமை நிறம் தோன்றும். எனவே ஊட்டச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள், கீரைகள், சிறுதானியங்களை உட்கொள்ள வேண்டும். எண்ணெய்யில் பொரித்த பலகாரங்கள், ஜங்க் உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம்.

Image credit - Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP