herzindagi
image

குறைந்த இடத்தில் அதிக மகசூல்; மாடித் தோட்டத்தில் பீட்ரூட் வளர்ப்பதற்கான எளிய குறிப்புகள்

குறைவான இடத்திலும் கூட எப்படி பீட்ரூட் செடிகளை வளர்த்து அறுவடை செய்யலாம் என்று இந்தக் கட்டுரையில் விளக்கமாக பார்க்கலாம். இவை பீட்ரூட் வளர்ப்பு குறித்து அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
Editorial
Updated:- 2025-09-11, 12:04 IST

மாடித் தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கு அதிக இடம் தேவையில்லாத, எளிதில் வளர்க்கக் கூடிய காய்கறி செடிகளில் ஒன்றாக பீட்ரூட் விளங்குகிறது. ஊட்டச்சத்துகள் நிறைந்த பீட்ரூட்டை வீட்டிலேயே வளர்ப்பது மிகவும் எளிது. சரியான பராமரிப்பு இருந்தால், எந்த ஒரு பெரிய இடமும் இல்லாமல், உங்கள் வீட்டிலேயே ஆர்கானிக் பீட்ரூட்டை அறுவடை செய்யலாம். அதற்கான செயல்முறைகளை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.

மேலும் படிக்க: வீட்டிலேயே கொத்தமல்லி செடியை ஈசியா வளர்க்கலாம்: தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கிய டிப்ஸ்!

 

சரியான தொட்டியை தேர்வு செய்யவும்:

 

பீட்ரூட் வேர் நிலத்தடியில் வளரும் என்பதால், குறைந்தபட்சம் 10 முதல் 12 அங்குலங்கள் ஆழம் கொண்ட தொட்டியை தேர்வு செய்ய வேண்டும். போதுமான ஆழம், வேர்கள் சரியாக வளர உதவுகிறது. இது ஆரோக்கியமான மற்றும் நல்ல வடிவிலான பீட்ரூட் கிடைக்க வழிவகுக்கும்.

 

தரமான விதைகளை பயன்படுத்தவும்:

 

எப்போதும் புதிய, நல்ல தரமான பீட்ரூட் விதைகளையே வாங்க வேண்டும். பழைய விதைகளில் முளைப்புத்திறன் குறைவாக இருக்கும். குறிப்பாக, தொட்டியில் விதைக்கக் கூடிய ரகங்களை தேர்வு செய்தால், குறைந்த இடத்தில் அதிக மகசூல் பெறலாம்.

Gardening

 

விதைகளை சரியான முறையில் விதைக்கவும்:

 

பீட்ரூட் விதைகளை அரை அங்குல ஆழத்தில், ஒன்றுக்கு ஒன்று 2-3 அங்குல இடைவெளி விட்டு விதைக்க வேண்டும். விதைகளை சரியாக விதைத்து, லேசாக நீர் ஊற்றவும். விதைகள் முளைக்கும் வரை, நேரடி சூரிய ஒளி இருக்கும் இடத்தில் இல்லாமல், சற்று தாழ்வான பகுதியில் வைக்கலாம்.

 

போதிய சூரிய ஒளியை உறுதி செய்யுங்கள்:

 

உங்கள் தொட்டியை ஒரு நாளைக்கு 4-6 மணி நேரம் சூரிய ஒளி படும் இடத்தில் வைக்கவும். பீட்ரூட்டுக்கு மிதமான சூரிய ஒளி தேவைப்படும். நேரடியான அல்லது கடுமையான வெப்பம் மண்ணை வேகமாக உலர வைக்கும். இது வேர் வளர்ச்சியை பாதிக்கும்.

மேலும் படிக்க: மல்லிகை செடி பராமரிப்பு: அதிக பூக்கள் பூக்க வைக்க இந்த எலுமிச்சை உரம் போதும்!

 

தண்ணீர் ஊற்றும் முறை:

 

மண்ணை ஈரமாக வைத்திருக்க வேண்டும். ஆனால், அதிக நீர் ஊற்றுவதை தவிர்க்கவும். அதிக நீர் வேர் அழுகலுக்கு வழிவகுக்கும். அதே சமயம், குறைந்த நீர் பீட்ரூட்டை கடினமானதாக அல்லது விரிசல் உள்ளதாக மாற்றும். லேசாக மற்றும் அடிக்கடி தண்ணீர் ஊற்றுவது சிறந்தது.

 

நாற்றுகளை பிரித்தெடுத்தல்:

 

நாற்றுகள் நெருக்கமாக வளர்ந்தால், அவற்றை நீக்கி வலுவான செடிகளை 3-4 அங்குலங்கள் இடைவெளியில் வைக்கவும். இது வேர் வளர்ச்சிக்கு உதவும்.

Garden tips

 

சரியான நேரத்தில் அறுவடை செய்யவும்:

 

பீட்ரூட் செடிகள் நட்டு வைக்கப்பட்ட 7-8 வாரங்களுக்கு பிறகு அறுவடைக்கு தயாராகி விடும். வேர்கள் சுமார் 2-3 அங்குலங்கள் விட்டம் கொண்டதாக இருக்கும் போது அறுவடை செய்யலாம். இளம் பீட்ரூட்கள் மிகவும் ருசியாகவும், மென்மையாகவும் இருக்கும். அவை சாலட் மற்றும் ஜூஸ் செய்வதற்கு ஏற்றவை.

 

இந்த எளிய வழிமுறைகள் அனைத்தையும் சரியான முறையில் பின்பற்றுவதன் மூலம் உங்கள் வீட்டிலேயே எளிதாக பீட்ரூட் செடியை வளர்த்து அறுவடை செய்யலாம்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com