polachi nandu curry recipe

பொள்ளாச்சி ஸ்பெஷல் அட்டகாசமான நண்டு குழம்பு செய்வது எப்படி?

பொள்ளாச்சியின் ஸ்பெஷல் நண்டு குழம்பு செய்வது எப்படி? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
Editorial
Updated:- 2023-01-01, 08:00 IST

மரியாதையான பேச்சு, உபசரிப்பு, விருந்தோம்பல் இதில் பொள்ளாச்சி மக்களை அடித்துக் கொள்ள முடியாது. கோவை மாவட்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது பொள்ளாச்சி நகரம். நூற்றாண்டு பழமையும் பெருமையும் கொண்ட பொள்ளாச்சியின் இயற்கை அழகை ரசிக்காதவர்களே இல்லை எனலாம். செழிப்பான விவசாயம், எந்தப் பக்கம் திரும்பினாலும் தென்னை மரங்கள் எனக் கண்களுக்கு இயற்கை விருந்து அளிக்கும் பொள்ளாச்சியில் அவர்களின் நகர்ப்புற உணவுகளும் அதிக கவனத்தைப் பெறுகின்றன.

குறிப்பாக அவர்கள் குழம்பு, கிரேவி, தொக்கு என எல்லாக்காரசாரமான உணவிலும் தேங்காய் சேர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். வயல் நண்டு, ஏரி மீன், இறால் போன்ற உணவுகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதே போல் பொள்ளாச்சி ஸ்பெஷலான பச்சைமிளகாய் புளிக்குழம்பு தென்னிந்தியாவில் படு ஃபேமஸ். அதன் பாரம்பரியமான செய்முறை அவர்கள் மட்டுமே அறிந்த ரகசியம். ஊரின் நீர் வாட்டமும் வறுத்து அரைக்கும் மசாலா கலவையும் பொள்ளாச்சி உணவுக்குக் கூடுதல் சுவையைத் தருகிறது.

அந்த வகையில் இன்றைய பதிவில் பொள்ளாச்சி ஸ்பெஷல் நண்டு குழம்பு செய்வது எப்படி? என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

polachi special nandu curry

  • வெங்காயம் – 2
  • தக்காளி – 2
  • நண்டு – ½ கிலோ
  • பூண்டு – 4 பல்
  • இஞ்சி – 1 துண்டு
  • கசகசா – ½ டீஸ்பூன்
  • காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
  • சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
  • சோம்பு தூள் – 1 டீஸ்பூன்
  • கறி மசாலா தூள் – 2 டேபிள் ஸ்பூன்
  • தனியா தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • தேங்காய் பால் – 2 கப்

இந்த பதிவும் உதவலாம்: ஆந்திரா ஸ்டைலில் கோங்குரா சட்னி செய்வது எப்படி?

செய்முறை

polachi special nandu masala

  • முதலில் மசாலா கலவையை ஃபிரஷாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதற்கு, மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, கசகசா, மிளகாய் தூள், தனியா தூள், சீரகத்தூள், சோம்பு தூள், கறி மசாலா தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின்பு அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • இப்போது அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின்பு அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, கடாயை மூடி நன்கு வேக விடவும்.
  • அடுத்து, சுத்தம் செய்து வைத்துள்ள நண்டு சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.
  • இப்போது அதில் திக்கான தேங்காய் பால் ஊற்றிக் கொதிக்க விடவும்.
  • கமகமவென என வாசனை வரும். இறுதியாகக் கொத்தமல்லி தூவி இறக்கினால் அட்டகாசமான பொள்ளாச்சி நண்டு குழம்பு தயார்.
  • இதை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

நீங்களும் இந்த செய்முறையைப் பின்பற்றி இந்த குளிர்காலத்தில் நண்டு குழம்பு செய்து சாப்பிடுங்கள். உடலுக்கு மிகவும் நல்லது. இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com