andhra gongura chutney

ஆந்திரா ஸ்டைலில் கோங்குரா சட்னி செய்வது எப்படி?

ஆந்திரா உணவு பட்டியலில் பலருக்கும் பிடித்தமான கோங்குரா சட்னி செய்முறையை இந்த பதிவில் பார்ப்போம்.
Editorial
Updated:- 2022-12-17, 09:00 IST

பலவகையான மொழி, கலாச்சாரம் நிறைந்திருக்கும் இந்தியாவில், உணவுமுறைகளும் அதன் சுவைகளும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. தமிழர்களின் உணவுகளில் காரம், உப்பு, புளிப்பு சுவைகள் சரிசமமாக சேர்க்கப்படுகிறது. இதுவே கர்நாடகா பக்கம் சென்றால் எல்லா உணவிலும் லேசான இனிப்புச் சுவை தட்டும். கேரளா என்றால் தேங்காய் எண்ணெயின் மணம். ஆந்திரா என்றால் காரம்.

ஆந்திராவின் சட்னி, சாம்பார், பச்சடி, துவையல் என எல்லாவற்றிலும் காரம் சற்றும் தூக்கலாகவே இருக்கும். அதற்கு காரணம் ஆந்திராவில் பயிரிடப்படும் மிளகாய் வகைகள் தான். குறிப்பாக ஆந்திரா ஸ்பெஷலான கோங்குரா சட்னி, ரெட் சட்னி போன்றவை உணவுப் பிரியர்கள் மத்தியில் படு ஃபேமஸ். கோங்குரா சட்னி ஆந்திரா மக்களின் மதிய உணவின் மூச்சு காற்று என்றே சொல்லலாம்.

கோங்குரா என அழைக்கப்படும் புளிச்சக்கீரையில் இந்த சட்னி செய்யப்படுகிறது. ஆரோக்கியம் நிறைந்த இந்த கீரையை வெறுமையாக சாப்பிடுவதும் உடலுக்கு நல்லது. ஆந்திரா மக்கள் புளிச்சக்கீரையை வைத்து சைவம், அசைவம் இரண்டிலும் எக்கச்சக்கமான ரெசிபிக்களைச் செய்கிறார்கள். நம்மூரில் இருக்கும் ஆந்திரா ஸ்டைல் உணவகங்களிலும் இந்த கோங்குரா சட்னியை சுவைக்கலாம். எனினும் வீட்டில் செய்தால் கூடுதல் ஸ்பெஷல் தானே! ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த இந்த ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா சட்னியை நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள். செய்முறையை இங்கு பகிர்கிறோம்.

தேவையான பொருட்கள்

gongura chutney

  • புளிச்சக்கீரை – 1/2 கட்டு
  • நீட்டு சிவப்பு மிளகாய்- 8
  • குண்டு காய்ந்த மிளகாய் - 40 கிராம்
  • புளி – 1 நெல்லிக்காய் அளவு
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • வெந்தயம்- 1/4 ஸ்பூன்
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • பெருங்காயம் – 2 துண்டு
  • நல்லெண்ணெய் - 150 கிராம்
  • உப்பு – தேவையான அளவு
  • தனியா – 2 ஸ்பூன்

இந்த பதிவும் உதவலாம்: நாகர்கோவில் ஸ்பெஷல் அவியல் ரெசிபி!!!

செய்முறை

special gongura chutney

  • முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் தனியா, வெந்தயம், பெருங்காயம் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின்பு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் குண்டு காய்ந்த மிளகாயைச் சேர்த்து வறுத்து, ஆற வைக்கவும்.
  • இப்போது அதே கடாயில் புளிச்சக்கீரையை சேர்த்து வதக்கவும். கீரை நன்கு சுருங்கி வந்ததும் அதை தனியாக எடுத்துக் கொள்ளவும்.
  • பின்பு மிக்ஸியில் வறுத்த குண்டு காய்ந்த மிளகாய் மற்றும் வறுத்த மசாலா பொருட்களைச் சேர்த்து பொடியாக்கி கொள்ளவும்.

இந்த பதிவும் உதவலாம்: சுவையான தந்தூரி தக்காளி சட்னி செய்வது எப்படி?

  • இப்போது அதனுடன் வதங்கிய கீரை, ஊற வைத்த புளி, பூண்டு, உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். அவ்வப்போது தண்ணீர் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து எடுக்கவும்.
  • பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சிவப்பு மிளகாய் சேர்த்து தாளித்து அதில் அரைத்து வைத்துள்ள சட்னியை கொட்டி 5 நிமிடத்திற்கு நன்கு கிளறவும்.
  • இப்போது சுவையான ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா சட்னி தயார்.

குறிப்பு: இந்த சட்னியை 2 நாட்களுக்கு வைத்து சாப்பிடலாம். புளி சேர்ப்பதால் எளிதில் கெட்டு போகாது.

இந்த சட்னி உங்களுக்கு நிச்சயம் பிடித்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: Google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com