herzindagi
aval breakfast instant recipes

Healthy Breakfast Recipes : வீட்டில் அவல் இருக்கா? அப்போ இரண்டு நாளைக்கு காலை டிபன் ரெடி!

காலையில் சீக்கிரமாகவும், ஹெல்தியாகவும் சமைக்கணுமா? இன்றைய பதிவில் பகிரப்பட்டுள்ள 2 அவல் ரெசிபிகளையும் முயற்சி செய்யுங்கள், உங்கள் வேலை சுலபமாகும்…
Editorial
Updated:- 2023-08-14, 16:44 IST

அவலை வைத்து எப்போதும் உப்புமா செய்து போர் அடித்து விட்டதா? இதனை வைத்து இரண்டு புது விதமான ரெசிபிகளை இன்றைய பதிவில் காணலாம். இவை இரண்டும் காலை உணவிற்கு ஏற்றவை. ஆரோக்கியமான இந்த 2 ரெசிபிகளையும் குறைந்த நேரத்திலேயே செய்து முடித்திடலாம்.

அவல் எளிதில் ஜீரணமாகும். இது இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அவலில் கலோரிகள் குறைவாகவும் இரும்புச்சத்து நிறைவாகவும் உள்ளன. இந்த ரெசிபி செய்வதற்கு எந்த வகையான அவலையும் பயன்படுத்தலாம். இன்று அவலை வைத்து புது விதமான ஊத்தாப்பம் மற்றும் மசாலா சப்பாத்தி செய்ய கற்றுக் கொள்வோம். 

 

இந்த பதிவும் உதவலாம்: சுதந்திர தினத்தன்று, இந்த மாதிரி கலர்ஃபுல்லான புலாவ் செய்து அசத்துங்க!

 

அவல் ஊத்தாப்பம்

aval breakfast oothapam

தேவையான பொருட்கள்

  • அவல் - 1 கப் 
  • வெங்காயம் - 1
  • துருவிய இஞ்சி - ½ டீஸ்பூன் 
  • கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன் 
  • அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன் 
  • பச்சை மிளகாய் - 1
  • மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன் 
  • கறிவேப்பிலை - சிறிதளவு 
  • கரம் மசாலா பொடி - ½ டீஸ்பூன்
  • கொத்தமல்லி - சிறிதளவு 
  • மிளகாய் பொடி - ½ டீஸ்பூன் 
  • சீரகப்பொடி - ½ டீஸ்பூன் 
  • மிளகு பொடி - ½ டீஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு 

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள அவலுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மசித்து கொள்ளவும்.
  • இதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • நீங்கள் விரும்பினால் இதில் துருவிய காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • அடுத்ததாக மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, சீரகப்பொடி மற்றும் சீரகப்பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்
  • இப்போது தோசைக்கல்லை சூடாக்கி சிறிய ஊத்தாப்பங்களாக ஊற்றி, இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை வேகவைத்து பரிமாறலாம்.

அவல் மசாலா சப்பாத்தி

aval breakfast roti

தேவையான பொருட்கள் 

  • அவல் - 1 கப்
  • கோதுமை மாவு - 1/2
  • வேகவைத்த உருளைக்கிழங்கு - 2
  • இஞ்சி பூண்டு விழுது
  • மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை 
  • சீரகப்பொடி - ½ டீஸ்பூன் 
  • கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு 
  • பச்சை மிளகாய் - 1
  • தயிர் - 2 டேபிள் ஸ்பூன் 
  • துருவிய கேரட் - ½ கப் 
  • ஆலிவ் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு 
  • தண்ணீர் - தேவையான அளவு  

செய்முறை 

  • ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் பொடி, சீரகப்பொடி மற்றும் மிளகாய் பொடி சேர்க்கவும். 
  • இதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். 
  • தண்ணீர் கொதிக்கும் பொழுது பொடித்து வைத்துள்ள அவல் சேர்த்து கிளறவும். இது கெட்டியான பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அணைக்கவும். 
  • அவல் கலவையுடன் துருவிய கேரட், மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி இலைகள், தேவையான அளவு உப்பு மற்றும் கோதுமை மாவு சேர்த்து நன்கு கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும். 
  • இதனை சப்பாத்திகளாக திரட்டி, தோசை கல்லில் நன்கு திருப்பிப் போட்டு இருபுறமும் வேகவிட்டு பரிமாறலாம். 
  • இந்த இரண்டு அவல் ரெசிபிக்களையும் நீங்களும் உங்கள் வீட்டில் செய்து ருசித்து மகிழுங்கள்!

 

இந்த பதிவும் உதவலாம்:ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா செய்ய, இந்த டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம். 

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com