எண்ணெயில் பிரியாமல் சரியான பக்குவத்தில் அதிரசம் வரணுமா, இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க!

தமிழகத்தின் பாரம்பரியமான மற்றும் பிரபல இனிப்பு வகையான அதிரசத்தின் முறையான செய்முறையை இப்பதிவில் படித்தறியலாம்…

adhirasam recipe easy

பொதுவாக அதிரசத்தின் செய்முறை கடினமதாகவே பார்க்கப்படுகிறது. வெல்ல பாகு முதல் அரிசி அரைக்கும் பதம் வரை சின்ன சின்ன விஷயங்களும் அதிரசத்தின் சரியான பக்குவத்திற்கு அவசியமானவை. எண்ணெயில் பிரிந்து போகாமல், வெளிப்புறம் மொறுகலாகவும் உட்பறம் மென்மையாகவும் சூப்பரான அதிரசத்தை இனி நீங்களும் வீட்டிலேயே சுலபமாக செய்திடலாம்.

முதல் முறையாக அதிரசம் செய்பவர்களும் இந்த செய்முறையை பின்பற்றி சரியான பக்குவத்தில் அதிரசம் செய்ய முடியும். அதிரசம் செய்வதற்கு அடர் நிறத்தில் இருக்கும் பாகு வெல்லத்தை பயன்படுத்தினால் கூடுதல் சுவையுடன் இருக்கும். தமிழகத்தின் பாரம்பரிய இனிப்பான அதிரசத்தின் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

traditional adhirasam recipe

  • பச்சை அரிசி - 1.5 கப்
  • வெல்லம் - 1 கப்
  • எள் - 1 டேபிள் ஸ்பூன்
  • ஏலக்காய் பொடி - ¼ டீஸ்பூன்
  • நெய் - 1 டீஸ்பூன்
  • எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை

pagu vellam for adhirasam

  • பச்சரிசியை நன்கு கழுவி 3 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
  • பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு, ஒரு வெள்ளை துணியில் பரப்பி 15 நிமிடங்கள் உலர விடவும். அதிக நேரம் உலர வைத்தால் அதிரசம் கடினம் ஆகி விடும். அரிசியை தொட்டால் கைகளில் ஒட்டும் பதம் சரியானது.
  • இதனை மிக்ஸியில் அரைத்து, சல்லடையில் சலித்து கொள்ளவும். மாவில் ஈரதன்மை குறையாமல் இருக்க பாத்திரத்தை மூடி வைக்கவும்.
  • இப்போது வெல்லத்தில் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து வெல்லத்தை கரைத்து கொள்ளவும்.
  • இதனை ஒரு முறை வடிகட்டிய பிறகு மீண்டும் சூடாக்கவும். மிதமான தீயில் வைத்து பாகை தயார் செய்யவும்.
  • பாகை தண்ணீரில் ஊற்றி, உருட்டினால் உருட்டும் பதத்திற்கு இருக்க வேண்டும். இதுவே அதிரசத்திற்கான சரியான பாகு பதம்.
  • அரிசி மாவுடன் ஏலக்காய் மற்றும் எள் சேர்த்து கலக்கவும். இதனுடன் தயாராக வைத்துள்ள பாகை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும்.
  • மாவு ஒட்டும் பதத்தில் சற்று தளர்வாக இருக்க வேண்டும். ஏனெனில் சிறிது நேரத்திற்கு பிறகு சற்று கடினமாகிவிடும்.
  • மாவு முழுவதும் ஆறிய பிறகு காற்று புகாத ஒரு பாத்திரத்திற்கு மாற்றி 1-2 நாட்களுக்கு வெளியில் வைக்கவும். அதற்கு மேல் வைப்பதாக இருந்தால் ஃபிரிட்ஜில் வைக்கவும்.
  • ஒரு சிறிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து உருட்டி, வாழை இலை அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் தட்டிக் கொள்ளவும்.
  • இதனை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  • அதிரசத்தை இரண்டு கரண்டிக்கும் இடையில் வைத்து, அதிகப்படியான எண்ணெயை பிழிந்து எடுக்கவும்.

இந்த செய்முறையை பின்பற்றி நீங்களும் உங்கள் வீட்டில் அதிரசம் செய்து உண்டு மகிழுங்கள்.

இந்த பதிவும் உதவலாம்:அசைவ உணவுகளை மிஞ்சும் சுவையில் ஆரோக்கியமான ப்ரோக்கோலி கட்லெட்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP