herzindagi
neer mor recipe

சூட்டை தணிக்கும் பாரம்பரிய பானகம், நீர் மோர்! கோடை வெயிலுக்கு குடிச்சு பாருங்க

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே கோடை வெயிலை எதிர்கொள்ள பானங்கள் தயாரிக்க வேண்டுமா ? பானகம், நீர் மோர் இரண்டையும் செஞ்சு பாருங்க.
Editorial
Updated:- 2024-04-25, 15:20 IST

கோடை வெயிலை சமாளிக்க பழச்சாறு, ஐஸ் கிரீம், மில்க் ஷேக் ஆகியவற்றை காசு கொடுத்து வாங்க வேண்டும் என அவசியமில்லை. வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டே ஆரோக்கியமான இரண்டு பானங்களை தயாரிக்கலாம். கோடை வெயிலை சமாளிக்கவும், உடல் ஆரோக்கியத்திற்கும் இந்த பாரம்பரிய பானங்களை குடிப்பது நல்லது. வீட்டிலேயே பத்து நிமிடங்களில் இந்த பானங்களை தயாரித்துவிடலாம். ஒன்று பானகம், மற்றொன்று நீர் மோர். இதில் நீர் மோர் எளிதாக தயாரிக்க முடியும் என நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

பானகம் செய்யத் தேவையானவை

  • வெல்லம்
  • புளி
  • சுக்கு
  • ஏலக்காய்
  • இஞ்சி
  • உப்பு
  • தண்ணீர்
  • எலுமிச்சை சாறு
  • கற்பூரம்

பானகம் செய்முறை

  • பாட்டி சொல்லும் பழைய காலத்து கதைகளில் பானகம் பற்றி கேள்விப்பட்டு இருப்போம். இது மிக எளிதில் தயாரிக்க கூடியது.
  • ஒரு பாத்திரத்தில் 60 கிராம் வெள்ளத்தை துருவி வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் பவுடர் வெல்லத்தை பயன்படுத்தலாம்.
  • இதனுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும். வெல்லத்தை தண்ணீரில் நன்றாக கலக்கவும்.
  • தண்ணீரை பயன்படுத்தும் முன்பாக அதை நன்கு கொதிக்க வைத்து ஆற விடுங்கள்.
  • இப்போது ஒரு துண்டு புளியை பத்து நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைத்து சேர்க்கவும். புளி சேர்க்க வேண்டும் என கட்டாயம் கிடையாது.
  • இதன் பிறகு தலா அரை டீஸ்பூன் சுக்கு மற்றும் ஏலக்காய் தட்டி போடவும்.
  • சுக்கு கிடைக்காத பட்சத்தில் அரை துண்டு இஞ்சியை இடித்து சேருங்கள்.
  • அடுத்ததாக தலா ஒரு சிட்டிகை உப்பு மற்றும் உண்ணக்கூடிய கற்பூரம் சேருங்கள்.
  • புளி சேர்க்காமல் இருந்திருந்தால் ஒரு முழு எலுமிச்சை பழத்தின் சாறு பயன்படுத்துங்கள். புளி பயன்படுத்தி இருந்தால் பாதி எலுமிச்சை பழத்தின் சாறு போதும்.
  • அனைத்தையும் நன்கு கலந்த பிறகு வடிகட்டவும். பிரிட்ஜில் வைக்காமல் அப்படியே குடிக்கலாம். குளிர்ச்சியாக உணர்வீர்கள்.

traditional summer drinks

நீர் மோர் செய்யத் தேவையானவை

  • தயிர்
  • தண்ணீர்
  • பச்சை மிளகாய்
  • இஞ்சி
  • சீரகம்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி
  • உப்பு
  • கடுகு
  • எண்ணெய்
  • பெருங்காயத் தூள்

நீர் மோர் செய்முறை

  • இரண்டு கப் கெட்டியான தயிரை மிக்ஸியில் அடித்து மூன்று கப் தண்ணீர் சேர்க்கவும்.
  • இதனுடன் பொடிதாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், இடித்த இஞ்சி ஒரு துண்டு, ஒரு டீஸ்பூன் சீரகம், கொஞ்சம் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  • மோர் தாளிக்க விரும்பினால் ஒரு கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு கடுகு, கறிவேப்பிலை, கொஞ்சம் பெருங்காயத் தூள் போட்டு ஒரு நிமிடத்திற்கு வறுத்து மோரில் சேருங்கள்.

கோடை வெயிலுக்கு பானகம், நீர் மோர் குடிங்க! உடல் சூடு தணியும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com