அதிக வியர்வை காரணமாக நீரிழப்பு பிரச்சனை ஏற்படுவது போல உடல் வெப்பம் அதிகரித்தால் பெண்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கோடை காலத்தில் அல்லது உடலில் ஏற்படும் உள் மாற்றங்களால் பெண்களுக்கு அதிக வெப்பம் ஏற்படலாம். முக்கியமாக, ஹார்மோன் மாற்றங்கள், மாதவிடாய் சுழற்சி, மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கங்கள் மற்றும் போதிய நீர் அருந்தாதது போன்ற காரணங்களால் உடல் வெப்பம் அதிகரிக்கிறது. உடல் உஷ்ணம் அதிகரித்தல் தலைவலி, உடல்வலி, வயிற்று வலி, வாந்தி, மயக்கம் போல பல உடல்நிலை பிரச்சனைகள் ஏற்படும். இந்த வெப்பத்தைக் கட்டுப்படுத்த சரியான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். அந்த வரிசையில் பெண்கள் உடன் உஷ்ணத்தை சரிசெய்ய உதவும் உணவுகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
உடல் வெப்பத்தைக் குறைக்க முதலில் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் அருந்தினால், உடல் வெப்பம் குறையும். மேலும், தயிர், மோர், இளநீர், பழச்சாறுகள் மற்றும் நீர் நிறைந்த பழங்கள் (தர்பூசணி, முலாம் பழம்) ஆகியவற்றை உட்கொள்ளலாம்.
வெண்டைக்காய், வெள்ளரிக்காய், முள்ளங்கி, கொய்யா போன்ற பச்சைக் காய்கறிகள் உடல் வெப்பத்தைக் குறைக்கும். இவற்றில் நீர் அளவு அதிகமாக இருப்பதால், உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். இவற்றை சாலட் அல்லது சூப்பாக சாப்பிடலாம்.
தேங்காய் நீர் இயற்கையான எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் தண்ணீரை சப்ளை செய்கிறது. இது உடல் வெப்பத்தைக் குறைத்து, சக்தியை அதிகரிக்கிறது. தேங்காய்ப்பாலும் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் ஒரு சிறந்த பானமாகும்.
மாதுளை பழத்தில் நிறைய நீர் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது உடல் வெப்பத்தைக் குறைத்து, ரத்த சுத்திகரிப்புக்கும் உதவுகிறது. மாதுளை சாறு அல்லது பழத்தை நேரடியாக சாப்பிடலாம்.
இந்த பழங்கள் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பப்பாளியில் உள்ள பாபைன் என்ஸைம் செரிமானத்திற்கு உதவுகிறது. அன்னாசியில் உள்ள புரோமிலேன் என்பது உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்துகிறது.
இவை உடலின் வெப்பத்தை சமநிலைப்படுத்தும். இரவில் ஊறவைத்த முந்திரி மற்றும் பாதாமை காலையில் சாப்பிடலாம். இது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
மேலும் படிக்க: சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க; ஒரு வாரம் தொடர்ந்து இந்த ஜூஸை குடித்து பாருங்க
சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை குடிக்கலாம். இது உடல் வெப்பத்தைக் குறைக்கும். சோம்பு வெப்பத்தைத் தணிக்கும் ஒரு சிறந்த மூலிகையாகும்.
பெண்களின் உடல் வெப்பத்தைக் குறைக்க, மேலே குறிப்பிட்ட உணவுகளை உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக கோடை காலத்தில் நீர் அளவு அதிகமாக உட்கொள்வதுடன், இயற்கையான குளிர்ச்சி தரும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
Image source: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com