காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காஃபி குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். உடலுக்கு ஆரோக்கியமாக ஒரு பானத்தை குடிக்க விரும்பினால் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிக்க முயற்சிக்கவும். காலை உணவுக்கு முன்பாக இலவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. இதை குடித்த பலரும் அசாத்திய நன்மைகளை பெற்றுள்ளனர். உடல் எடையை நிர்வகிப்பது முதல் ஜீரணத்திற்கு உதவுவது வரை இலவங்கப்பட்டை தண்ணீர் பயன்படும். இலவங்கப்பட்டையை நேரடியாக தண்ணீரில் கொதிக்கவிட்டு குடிக்கலாம் அல்லது பொடியாக அரைத்து போட்டு வடிகட்டி குடிக்கலாம். காலையில் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை இந்த பதிவில் பார்ப்போம்.
இலவங்கப்பட்டையில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கக்கூடிய சேர்மங்கள் உள்ளன. இது உடலில் கூடுதல் கலோரிகளை எரிக்க உதவுகிறது.
இலவங்கப்பட்டை தண்ணீர் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதோடு இரத்த சர்க்கரை அளவை சீராக்கும். இது நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்களுக்கு இலவங்கப்பட்டை தண்ணீர் சிறந்த தேர்வாகும்.
இலவங்கப்பட்டை மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இலவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பது நினைவாற்றல் மற்றும் கவனத்தை அதிகரிக்கும்.
இலவங்கப்பட்டை தண்ணீர் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துவதன் மூலமும் செரிமானத்தை உதவும். ஒட்டுமொத்தமாக இலவங்கப்பட்டையின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பண்புகள், இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தும் மற்றும் பசியைக் கட்டுப்படுத்தும் திறன், எடை இழப்பு முயற்சிக்கு சிறந்த பலனை தரும்.
இலவங்கப்பட்டையில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. அவை நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாட்டை ஆதிகரிப்பதுடன் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவும்.
இலவங்கப்பட்டை தண்ணீர் தொடர்ந்து குடிப்பது உடலில் கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்க உதவும். எனவே இதய நோய் அபாயமும் நீங்கும்.
இலவங்கப்பட்டையின் இயற்கையான பண்புகள் மாதவிடாய் வலியைக் குறைக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com