Inippu Paniyaram - பொங்கல் பண்டிகைக்கு இனிப்பூட்டும் இனிப்பு பணியாரம்

மென்மையான மற்றும் சுவையான இனிப்பு பணியாரம் அரிசி, வெள்ளம் ஆகியவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

Inippu Kuli Paniyaram

பொங்கல் பண்டிகை ஸ்பெஷல் உணவுகளில் இனிப்பிற்காக சேமியா பாயாசம், ஜவ்வரிசி பாயாசம் எப்படி செய்வது என பகிர்ந்துவிட்டோம். இவை இரண்டையும் பருக மட்டுமே முடியும். இனிப்புப் பலகாரம் இன்றி பொங்கல் பண்டிகை நிறைவுபெறாது. எனவே இனிப்பு பணியாரம் செய்முறையை இங்கே பகிர்ந்துள்ளோம்.

வழக்கமாக இனிப்பு பணியாரம் செய்ய விரும்புவோர் இட்லி மாவில் வெள்ளத்தை கலந்து அதை வேக வைத்து விரைவில் பணியாரம் தயாரித்துவிடுவார். இப்படி செய்தால் அந்த பணியார மாவு ஒரு நாளுக்கு மேல் தாங்காது. அதே நேரம் மைதா, அரிசி மாவு, வெள்ளம் சேர்த்து பணியார மாவு தயாரித்தால் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு அந்த மாவு கெடாது.

ஆனால் அந்த மாவில் பழங்கள் சேர்த்தால் ஒரே நாள் மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும். இரண்டாம் நாள் அந்த பணியார மாவை பயன்படுத்த நினைத்தால் பழங்கள் மாவின் தன்மையை முற்றிலும் மாற்றிவிடும்.

Inippu Paniyaram

இனிப்பு பணியாரம் செய்யத் தேவையானவை

  • மைதா 100 கிராம்
  • அரிசி மாவு 200 கிராம்
  • வெள்ளம் 200 கிராம்
  • ஏலக்காய் தூள் அரை டீஸ்பூன்
  • நெய் தேவையான அளவு
  • உப்பு - ஒரு சிட்டிகை
  • சமையல் சோடா அரை ஸ்பூன்

செய்முறை

  • முதலாவதாக ஒரு கடாயில் 200 கிராம் வெள்ளத்தை போட்டு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதை உருக வைக்கவும்
  • வெள்ளம் உருகிய பிறகு அதை வடிகட்டுங்கள். ஏனென்றால் வெள்ளத்தில் இருக்கும் தூசி, அழுக்கு ஆகியவை அகற்றப்பட வேண்டும்.
  • இதன் பின்னர் உருக்கிய வெள்ளத்தை தனியாக வைத்துவிடுங்கள்.
  • தற்போது ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு 200 கிராம், மைதா 100 கிராம் எடுத்துக் கொள்ளவும்
  • இவற்றுடன் சிறிதளவு உப்பு மற்றும் ஏலக்காய் தூள் அரை டீஸ்பூன் சேர்க்கவும்
  • உருக்கிய வெள்ளத்தை பாத்திரத்தில் ஊற்றி நன்கு மிக்ஸ் செய்யவும்
  • கைகளை நன்கு கழுவிய பிறகு பாத்திரத்தில் இருக்கும் அனைத்தையும் பிசைந்து வடை மாவு அல்லது இட்லி மாவு பக்குவத்திற்கு கொண்டு வரவும்
  • தற்போது அரிசி மாவின் கடினத்தன்மையை குறைக்க சமையல் சோடா அரை ஸ்பூன் சேர்க்கவும்
  • இறுதியாகப் பணியாரக் கல்-ன் ஒவ்வொரு குழியிலும் பாதி அளவிற்கு நெய் ஊற்றவும்
  • நெய் சூடான பிறகு இனிப்பு பணியார மாவை குழியில் இருக்கும் நெய்யில் மூழ்கும் அளவிற்கு ஊற்றவும்
  • நெய் அதிகமாக ஊற்றி விட்டோம் என நினைக்க வேண்டாம், ஏனென்றால்
  • பணியாரம் வேகும் போது நெய் அனைத்தும் உறிஞ்சப்படும்

இருபுறமும் நன்கு வெந்த பிறகு பணியாரத்தை குழியில் இருந்து வெளியே எடுத்தால் பொங்கல் பண்டிகைக்கு இனிப்பூட்டும் இனிப்பு பணியாரம் கிடைத்துவிடும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP