மனம் மாறாத மதுரை கறி தோசை ரெசிபி

தூங்காநகரமான மதுரையில் மல்லிகை பூ போன்ற இட்லிக்கு அடுத்தபடியாக அனைவரும் விரும்பி ருசிக்கும் உணவாக கறி தோசை உள்ளது. இரண்டாமிடம் பன் பரோட்டா இல்லையா எனக் கேட்காதீர்கள். மதுரையை விட விருதுநகரில் பன் பரோட்டா இன்னும் சுவையாக இருக்கும்.
image

தூங்காநகரமான மதுரை என பேச்சு எடுத்தால் நம் அனைவருக்கும் நினைவில் வருவது மீனாட்சி அம்மன் கோவில். அதற்கு அடுத்தபடியாக மதுரை மல்லிகை பூ, பூ போன்ற இட்லி ஆகியவற்றை மதுரைவாசிகள் குறிப்பிடுவார்கள். மதுரையில் 24 மணி நேரம் கிடைக்கும் உணவென்றால் அது பன் பரோட்டா. ஆனால் அதை விட ருசியான ஒன்று இருக்கிறது. அதன் செய்முறையை இந்த பதவில் பார்க்கப் போகிறோம். மதுரையில் உள்ள எந்த அசைவ கடைகளுக்கு சென்றாலும் அங்கு கிடைக்க கூடிய உணவு கறி தோசை. கொழுத்தும் வெயிலில் கூட கறி தோசையை சுட சுட சால்னாவோடு தொட்டு சாப்பிடும் போது ருசி வேற லெவலில் இருக்கும். இட்லியை நாம் கண்டுபிடிக்கும் முன்பே தோசை சுடும் பழக்கம் தமிழகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. சங்க காலத்தில் கூட மெல்லடை என்ற உணவு தொடர்பான வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. வாருங்கள் அதன் செய்முறையை பார்ப்போம்.

madurai mutton kari dosa

மதுரை கறி தோசை செய்யத் தேவையானவை

  • மட்டன் கொத்து
  • வெங்காயம்
  • நல்லெண்ணெய்
  • சீரகம்
  • பச்சை மிளகாய்
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்
  • தனியா தூள்
  • உப்பு
  • தண்ணீர்
  • கொத்தமல்லி
  • கறிவேப்பிலை
  • முட்டை

குறிப்பு : சின்ன வெங்காயம் பயன்படுத்தினால் ருசி இன்னும் நன்றாக இருக்கும். 7-8 சின்ன வெங்காயம் பயன்படுத்துங்கள்.

மதுரை கறி தோசை செய்முறை

  • கடாயில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் இரண்டு பெரிய வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வதக்கதவும்.
  • நன்கு வதங்கிய பிறகு இரண்டு பச்சை மிளகாயை வெட்டி போடுங்கள். அடுத்ததாக ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கலந்து விடவும்.
  • இப்போது தேவையான அளவு உப்பு, தலா ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், கொஞ்சமாக மிளகு தூள் போட்டு மசாலா தயாரிக்கவும்.
  • அரை கிலோ மட்டன் கொத்துக்கறி போட்டு மசாலாவுடன் நன்கு கலந்துவிட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து தண்ணீர் ஊற்றி கடாயை மூடி மிதமான சூட்டில் கறியை பத்து நிமிடங்களுக்கு குறையாமல் வேக விடவும்.
  • கறி நன்கு வெந்த பிறகு கொஞ்சமாக கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு கலந்துவிடுங்கள்.
  • தோசைக் கல் சூடு செய்து ஊத்தப்பம் சைஸில் மாவு ஊற்றி சுற்றி எண்ணெய் தடவி ஒரு முட்டையை உடைத்து ஊத்தப்பம் மீது ஊற்றுங்கள்.
  • சில விநாடிகளுக்கு பிறகு ஒரு கரண்டி கொத்துக் கறியை தோசையில் தடவி திருப்பி போடுங்கள்.
  • நன்கு வெந்த பிறகு அடுப்பில் இருந்து எடுத்து சால்னாவோடு குடும்பத்தினருக்கு பரிமாறுங்கள்.

இதுபோன்ற சுவையான கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP