ஆந்திரா சமையல் தென் இந்திய சமையல் முறைகளில் மிகவும் வித்தியாசமானது. சமீபத்தில் நடிகர் பிரபாஸின் நேர்காணல் ஒன்றை பார்த்த போது தனக்கு பிடித்தமான உணவாக இறால் வெண்டைக்காய் குழம்பை குறிப்பிட்டார். என்னது இறால் வெண்டைக்காய் குழம்பா ? அசைவ சமையலில் தக்காளி, வெங்காயம் சேர்த்து பார்த்திருப்போம். வெண்டைக்காய் பயன்படுத்துவார்களா என அதிர்ச்சியாக இருந்தது. தேடி பார்த்து போது ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்தில் இறால் வெண்டைக்காய் குழம்பு பிரபலமான உணவாக இருக்கிறது. இதன் சுவை மிகவும் தனித்துவமானது. 20க்கும் குறைவான பொருட்களை கொண்டு இந்த சமையலை முடித்துவிடலாம். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம்.
இறால் வெண்டைக்காய் குழம்பு செய்யத் தேவையானவை
- இறால்
- வெண்டைக்காய்
- நல்லெண்ணெய்
- கரம் மசாலா
- கறிவேப்பிலை
- புளி
- தண்ணீர்
- கொத்தமல்லி
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- மிளகு தூள்
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- நல்லெண்ணெய்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்
மேலும் படிங்கஆந்திரா ஸ்டைலில் காரசாரமான முட்டை பூண்டு மசாலா! டேஸ்டே தனி...
இறால் வெண்டைக்காய் குழம்பு செய்முறை
- கடாயில் 50 மில்லி லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு இரண்டு பெரிய வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கி நிறம் மாறிய பிறகு இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், குழம்பிற்கு தேவையான அளவு உப்பு, அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு கலந்துவிடுங்கள்.
- பச்சை வாடை போன பிறகு சுத்தப்படுத்திய அரை கிலோ இறாலை போட்டு மசாலாவுடன் மிக்ஸ் செய்யவும். இறால் மசாலா பொருட்களில் ஒரு நிமிடம் ஊறிய பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்களுக்கு வேக விடுங்கள்.
- மிதமான சூட்டில் இறால் வேகட்டும். கூடுதல் நிமிடங்கள் கூட எடுக்கலாம். இதன் பிறகு நெல்லிக்காய் சைஸ் புளியை சுடுதண்ணீரில் 10 நிமிடங்களுக்கு ஊறவிட்டு அதை இந்த குழம்பில் ஊற்றவும்.
- சில நிமிடங்கள் கழித்து ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஆறு பச்சை மிளகாய், தலா ஒரு ஸ்பூன் கரம் மசாலா மற்றும் மிளகு தூள் சேர்க்கவும்.
- கொஞ்சம் கறிவேப்பிலையும் போட்டு கலந்துவிடுங்கள். இரண்டு நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவிய கால் கிலோ வெண்டைக்காயை போடுங்கள்.
- மீண்டும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற்றி கடாயை மூடி 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடுங்கள். இறுதியாக குழம்பின் மீது கொத்தமல்லி தூவி விடவும்.
- சூப்பரான சுவையான ஆந்திரா ராயலு வெண்டக்காய புளுசு ரெடி... மன்னிக்கவும். ஆந்திரா ஸ்பெஷல் இறால் வெண்டைக்காய் குழம்பு தயார்.
- சாதத்தில் ஊற்றி ருசி பாருங்கள். டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation