herzindagi
vegetarian fish fry

Saiva Meen Varuval : சைவ நாட்களில், இது போல வெஜிடேரியன் மீன் வறுவல் செய்து அசத்துங்க!

சைவ உணவுகளையும் பக்குவமாக சமைத்தால் அசைவ உணவு சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே வராது…
Editorial
Updated:- 2023-07-04, 09:54 IST

பொதுவாக வார இறுதியில் ஞாயிற்று கிழமைகளில் அசைவ உணவு செய்து சாப்பிடுவோம். ஒரு சிலர் வாரத்திற்கு 2-3 முறை அசைவ உணவு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இன்றைய வாழக்கை சூழலில் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே அசைவ உணவு சாப்பிடும்படி மருத்துவர்களும் பரிந்துரை செய்கிறார்கள். மீதம் உள்ள வார நாட்களில் முட்டை சேர்த்துக்கொள்ளலாம். 

மேலும் சைவ உணவுகளிலும் ஒரு சில மாறுதல்களை செய்தால் அசைவு உணவு சாப்பிட வேண்டும் என்ற ஆசையே வராது. அந்த வகையில் ஒரு அற்புதமான சைவ மீன் வறுவலை இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம். இதை செய்வதற்கு குறைந்த அளவு எண்ணெய் பயன்படுத்தி தோசை கல்லில் வறுக்கலாம், இதனை பொரித்து எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வாழைக்காயை கொண்டு ஒரு அற்புதமான சைவ மீன் வறுவல் செய்ய கற்றுக்கொள்வோம். சைவ மீன் வறுவல் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: ரவா தோசை நல்ல மொறு மொறுனு வரும், இந்த டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்க! 

 

தேவையான பொருட்கள்  

vazhakkai fish fry

  • வாழைக்காய் - 2 
  • எண்ணெய் - தேவையான அளவு  

அரைக்க  

  • சின்ன வெங்காயம் - 8  
  • இஞ்சி - 1 அங்குல அளவு 
  • பூண்டு உரித்தது - 10 - 15  
  • பச்சை மிளகாய் - 1  
  • மிளகு  - 1/4 டீஸ்பூன் 
  • சோம்பு - 1/4 டீஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு  
  • காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
  • கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன் 
  • மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி 
  • எலுமிச்சை சாறு - ½ மூடி  
  • அரிசி மாவு - 4 டீஸ்பூன் 
  • கார்ன்ஃப்ளார் - 4 டீஸ்பூன் 
  • கடலை மாவு - 4 டீஸ்பூன்  

செய்முறை 

saiva meen varuval

  • இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் வாழைக்காயை தோல் உரித்து தயாராக வைக்கவும். 
  • வாழைக்காயை மீன்களை போல வெட்டி தயாராக வைக்கவும். சைடு ஆக வெட்டினால் மீன்களை போன்ற வடிவில் கிடைக்கும். 
  • இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் மேலே குறிப்பிட உள்ள அனைத்து பொருட்களையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிருதுவான பேஸ்ட் ஆக அரைக்கவும். 
  • இந்த மசாலாவை நறுக்கி வைத்துள்ள வாழைக்காய் மீது தடவி 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். 
  • இப்போது ஒரு தோசை கல்லை சூடாக்கி சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். 
  • பின்னர் மசாலா தடவிய வாழைக்காயை தோசை கல்லில் அடுக்கி இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

 

இந்த பதிவும் உதவலாம்: உங்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இப்படி பைனாப்பிள் ரசம் வெச்சு சாப்பிடுங்க!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com