இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளும் மிகவும் சுலபமாக தொழில்நுட்ப சாதனங்களைக் கையாள்வதில் சிறந்தவர்களாக உள்ளனர். வயதானவர்கள் ஸ்மார்ட் போன்களை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற தடமாறும் சமயத்தில், என்கிட்ட குடிங்க நான் உங்களது சொல்லிக் கொடுக்கிறேன் என சொல்லும் அளவிற்கு குழந்தைகள் உள்ளனர். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு குழந்தைகள் முன்னேற்றம் அடைகிறார்கள் என்றாலும், செல்போன்கள் உபயோகிப்பதால் அடிமையாகியும் விடுகின்றனர்.
செல்போன் இல்லையென்றால் சாப்பிட மாட்டேன், பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்றால், மாலை நேரத்தில் வந்து மொபைல் கொடுப்பீர்களா? என கட்டளையிட்டு தான் குழந்தைகள் செல்கின்றனர். இந்த நிலையில் உங்களது குழந்தைகளும் உள்ளார்களா? இந்த பழக்கத்தை எப்படி மாற்றுவது? என குழப்பத்தில் உள்ள பெற்றோர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், கொஞ்சம் இந்த கட்டுரைப் படித்து விடித்து செல்லுங்கள். குழந்தைகளின் செல்போன் பார்க்கும் நேரத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்பதற்கான வழிமுறைகள் இங்கே.
செல்போன் பார்ப்பதைத் தவிர்க்க செய்ய வேண்டியது?
பொதுவாக குழந்தைகளுக்கு அவர்களுக்கு என்ன பிடிக்குமோ? அதன் மீது அதீத ஆசைக் கொள்வார்கள். மீண்டும் மீண்டும் பிடித்த விஷயங்களைச் செய்ய வேண்டும் என ஆர்வம் காட்டுவார்கள். இதுபோன்று தான் செல்போன் உபயோகிப்பதும். இந்த சூழலைத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்தால், முதலில் பெற்றோர்கள் வீட்டுச் சூழலை அவர்களுக்குப் பிடித்தது போன்று மாற்ற வேண்டும்.
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதோடு செல்போன் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தால் பெற்றோர்கள் குழந்தைகளோடு குழந்தையாக விளையாட வேண்டும். கண்ணாமூச்சி, பிடித்தவற்றை வரைய சொல்லுதல், பூங்காவிற்குச் சென்று விளையாடுவது, தாயம், பல்லாங்குழி, நொண்டி போன்ற பாராம்பரிய விளையாட்டுகளை விளையாட கற்றுக்கொடுக்கவும்.
மேலும் படிக்க:இன்றைய காலத்துக் குழந்தைகளை உளவியல் ரீதியாக சமாளிக்கும் வழிமுறைகள்
இதோடு மட்டுமின்றி வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு ஒருமுறையாவது நூலகங்கள் எவ்வாறு செயல்படும்? என குழந்தைகளைக் கற்றுக்கொடுங்கள். அதன் பின்னதாக புத்தகங்களை எடுத்து எப்படி படிப்பது? என்பது போன்றவற்றை விளையாட்டுத்தனமாக சொல்லிக் கொடுக்கும் போது ஆர்வத்துடன் கேட்பார்கள். என்ன புதியதாக இருக்கிறது என தெரிந்துக் கொள்ள முயற்சி செய்வார்கள்.
பெற்றோர்களின் மாற்றம் அவசியம்:
தொழில்நுட்ப உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளும் யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே கற்றுக் கொள்கிறார்கள். தாய், தந்தை, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா போன்ற அனைத்து உறவுகளும் தொழில்நுட்ப சாதனங்களைக் கையாள்வதைப் பார்க்கும் போது குழந்தைகளும் அதற்கு அடிமையாகி விடுகிறார்கள். எனவே முதலில் பெற்றோர்கள் பாதுகாப்பு வளையத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். இதன் படி குழந்தைகள் முன்னதாக செல்போன்களைக் கையில் எடுக்காதீர்கள். முக்கியமான வேலை இருந்தால் மட்டுமே எடுக்க வேண்டும் என்று உங்களது செயல்களின் வாயிலாக அவர்களுக்கு கற்றுக் கொடுக்கவும்.
செல்போன்கள் உபயோகித்தால் என்னென்ன பாதிப்புகள் வரும் என்பதை அவர்களுக்குப் புரியும் வகையில் சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் அடம்பிடிப்பார்கள் என்பது இயல்பான ஒன்று. அதே சமயம் தமக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படும் என்றால் ஒருபோதும் அந்த பக்கம் செல்லக்கூடாது என அறிவு குழந்தைகளிடம் அதிகளவில் இருக்கும்.
வெளியில் விளையாட அனுமதித்தல்:
முன்பெல்லாம் நகரம் மற்றும் கிராமத்துச் சூழலில் வாழ்ந்தாலும் குழந்தைகள், நண்பர்களுடன் வெளியில் சந்தோஷமாக விளையாடுவார்கள். இன்றைய சூழலில் குழந்தைகளை வெளியில் அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். அந்தளவிற்கு வன்முறைகளும் அதிகரித்து தான் வருகிறது. இது தவறு இல்லை. தனியாகத் தான் அனுப்ப வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டு அறைகளில் இருந்து வெளியேறி, வாசலில் கொஞ்சம் விளையாடிப் பாருங்கள். அந்த சந்தோஷத்திற்கு அளவில்லை. மேலும் உங்களது குழந்தைகள் என்ன ஆசைப்படுகிறார்கள்? என்பதை சுலபமாக அறிந்துக் கொள்வதோடு அதை செயல்படுத்தவும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
மேலும் படிக்க:கடுமையான பணிச்சூழலிலும் வீட்டில் குழந்தையுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட உதவும் குறிப்புகள்
இது போன்ற விஷயங்ளை ஒருமுறையாவது செய்துப் பாருங்கள். செல்போன் உபயோகிப்பதைக் கட்டுப்படுத்துவதோடு, உங்களது குழந்தைகள் என்ன ஆசைப்படுகிறார்கள்? என்பதையும் நீங்கள் அறிந்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
Image credit - Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation