herzindagi
egg pulusu recipe

ஆந்திரா ஸ்டைலில் சுவையான முட்டை குழம்பு! இந்த மாதிரி செஞ்சு பாருங்க...

ஆந்திரா ஸ்டைலில் முட்டை குழம்பு செஞ்சு பாருங்க... சுவையில் மெய்மறந்து மீண்டும் இதே ரெசிபியை பின்பற்றுங்கள்...
Editorial
Updated:- 2024-08-08, 23:41 IST

ஆந்திரா சமையல் பெரும்பாலும் காரசாரமாக இருந்தாலும் ருசி மிகுந்ததாக இருக்கும். நாம் இந்த பதிவில் பார்க்கப் போவது குடு புளுசு எனும் சுவையான முட்டை குழம்பு. இது சாதாரண விஷயம் தானே என நீங்கள் கூறலாம். ஆனால் தனியா தூள், கரம் மசாலா போன்றவை இன்றி மற்றொரு விஷயத்தை சேர்த்து சுவையை அதிகரிக்க போகிறோம். இந்த சுவையான ரெசிபியை மிக எளிதாக செய்யலாம். வாருங்கள் ஆந்திரா ஸ்டைல் குடு புளுசு முட்டை குழம்பை ருசிக்கலாம்...

egg gravy andhra style

முட்டை குழம்பு செய்யத் தேவையானவை

  • முட்டைகள்
  • புளி 
  • வெந்தய இலை
  • வெங்காயம் 
  • தக்காளி 
  • கொத்தமல்லி
  • பச்சை மிளகாய் 
  • கடுகு 
  • நல்லெண்ணெய்
  • கறிவேப்பிலை 
  • மஞ்சள் தூள் 
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • தண்ணீர் 
  • உப்பு

மேலும் படிங்க காரசாரமான காரைக்குடி பச்சை மிளகாய் தொக்கு!

முட்டை குழம்பு செய்முறை

  • முதலில் முட்டைகளை வேக வைக்கலாம். தண்ணீரை கொதிக்க விட்டு முட்டைகளை போட்டால் அவை உடைய வாய்ப்புண்டு. எனவே முட்டைகளை தண்ணீரில் போட்டு 10 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
  • இதனிடையே எலுமிச்சை சைஸ் புளியை 100 மில்லி லிட்டர் தண்ணீரில் கரைக்கவும்.
  • பேனில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு முட்டைகளை வறுக்கவும்.
  • இப்போது கடாயில் ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் கடுகு போட்டு பொரிந்ததும் மூன்று பெரிய சைஸ் வெங்காயத்தை பொடிதாக நறுக்கி போட்டு வதக்கவும்.
  • அதே அளவில் மூன்று தக்காளி நறுக்கி சேருங்கள். இந்த இடத்தை முக்கியமாக கவனியுங்கள். வெந்தய இலைகளை பொடிதாக நறுக்கி போடவும். முட்டை குழம்பிற்கு இது சுவை சேர்க்கும்.
  • அடுத்ததாக நான்கு பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை, ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், மூன்று ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மூன்று ஸ்பூன் மிளகாய் தூள் போட்டு வதக்கவும்.
  • இதையடுத்து புளி தண்ணீர் மற்றும் ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றவும். எண்ணெய் பிரிந்தவுடன் முட்டைகளை போடவும்.
  • தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க விடுங்கள்.
  • இறுதியாக கொத்தமல்லி சேர்த்தால் முட்டை குழம்பு ரெடி...
  • தனியா தூள், கரம் மசாலா சேர்க்காமலேயே ஆந்திரா ஸ்டைல் முட்டை குழம்பு அற்புதமான சுவையில் இருக்கும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள். எங்களை முகநூலில் பின்தொடர்வதற்கு HER ZINDAGI கிளிக் செய்யவும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com