herzindagi
karnataka crispy nippattu

கர்நாடக ஸ்டைலில் மொறுமொறு “தட்டை” ருசிக்கலாம் வாங்க!

மொறுமொறு தட்டையை கடைகளில் மட்டும் தான் தயாரிக்க வேண்டுமா என்ன ? வீட்டிலும் செய்யலாம். இரண்டு மணி நேரத்தில் கர்நாடகா ஸ்பெஷல் நிப்பட்டு தயாரிக்கலாம்.
Editorial
Updated:- 2024-03-29, 18:59 IST

பொதுவாக அனைவருக்குமே மாலை நான்கு மணி ஆனவுடன் டீ அல்லது காஃபி குடிக்கும் போது முறுக்கு அல்லது தட்டை போன்ற காரசாரமான தின்பண்டங்களை ருசிக்க விருப்பம் இருக்கும். வீட்டில் முறுக்கு செய்து பார்த்திருப்போம். தட்டையை கடைகளில் பாக்கெட்டில் வாங்கு ருசித்திருப்பீர்கள். ஆனால் இதை எளிதாக வீட்டிலும் தயாரிக்க முடியும். இந்த கட்டுரையில் கர்நாடக ஸ்டைலில் தட்டை எப்படி செய்வது என பார்க்கலாம். கர்நாடகாவில் இதை நிப்பட் அல்லது நிப்பட்டு என்று அழைக்கின்றனர். தமிழகத்தின் தட்டையும் கர்நாடகாவின் நிப்பட்-ம் ஒன்று தான். சிலர் உளுந்து பயன்படுத்துகின்றனர், சிலர் உளுந்து பயன்படுத்துவதில்லை.

nippattu recipe

தட்டை செய்ய தேவையானவை

  • அரிசி மாவு
  • உளுந்து மாவு
  • கடலை பருப்பு
  • பூண்டு
  • பெருங்காயம்
  • கறிவேப்பிலை
  • தண்ணீர்

குறிப்பு

ஒரு கப் அரிசி மாவிற்கு ஐந்து ஸ்பூன் உளுந்து மாவு போடுவது அவசியம். உளுந்து தட்டையின் சுவையை அதிகரிக்கும். பயன்படுத்தும் கடலை பருப்பு பச்சையாக இருக்க கூடாது. தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்தால் மட்டுமே மென்மையாக வரும்.

மேலும் படிங்க குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வாழைப்பழ பேன்கேக் செய்முறை

தட்டை செய்முறை

  • ஒரு பேனில் 200 கிராம் அரிசி மாவு எடுத்து அதை குறைந்த தீயில் அடிபிடிக்காமல் சில நிமிடங்களுக்கு வறுக்கவும். இதனால் மாவின் பச்சை வாடை போகும் மற்றும் மாவின் ஈரப்பதம் குறையும்.
  • இதன் பிறகு சல்லடையில் போட்டு சலித்து தனியாக வைக்கவும். அடுத்ததாக ஐந்து ஸ்பூன் உளுத்தம் பருப்பை பச்சையாக தீயில் வாட்டவும். முறுக்கு செய்ய உளுந்து எப்படி அவசியமோ அது போல தட்டைக்கும் முக்கியம். பச்சை வாடை போன பிறகு மிக்ஸியில் போட்டு பவுடராக்கி சல்லடையில் சலித்து அரிசி மாவுடன் சேர்க்கவும்.
  • இவற்றுடன் தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் பெருங்காயத் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், மூன்று ஸ்பூன் இஞ்சி சேர்த்து மிக்ஸ் செய்யவும். 
  • அதன் பிறகு ஊறவைத்த கடலைப் பருப்பு 75 கிராம், பொடிதாக நறுக்கிய கறிவேப்பிலை, வறுத்த வேர்க்கடலையை பூரி கட்டையால் பொடிதாக உடைத்து சேர்க்கவும்.
  • கொஞ்சம் கடலெண்ணெய்யை சூடுபடுத்தி அதிலிருந்து 20 மில்லி அளவுக்கு மாவில் சேர்க்கவும். சூடான எண்ணெய் சேர்த்தால் தட்டை மொறுமொறுப்பாக வரும்.
  • நன்றாக மிக்ஸ் செய்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவின் பதத்திற்கு பிணையவும்.
  • இதை உருண்டை பிடிக்கும் போது பீச் மணல் போல இருக்கும். தண்ணீர் அதிகமாக பயன்படுத்தினால் மாவு உதிரியாகி விடும்.
  • கடாயில் போட்டு பொரித்தெடுக்கும் முன்பாக மாவை கொஞ்சம் ஊற விட்டு அதன் பிறகு ஒரு தட்டில் கடலெண்ணெய்யை தொட்டு தொட்டு மாவை தட்டவும்.
  • குறைந்த தீயில் சுமார் எட்டு நிமிடங்களுக்கு வறுக்கவும். கடலை பருப்பும், வேர்க்கடலையும் நன்கு ரோஸ்ட் ஆக வேண்டும்.  

மாலை நேரத்தில் டீ குடிக்கும் போது இது அற்புதமான காம்போ ஆகும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com