herzindagi
easy banana pancake recipe

Banana Pancake Recipe : குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வாழைப்பழ பேன்கேக் செய்முறை

காலை வேளையில் சத்தான உணவு கொடுத்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என நினைக்கிறீர்களா ? அப்போ வாழைப்பழ பேன்கேக் செய்முறை பற்றி தெரிஞ்சுகோங்க
Editorial
Updated:- 2024-02-26, 17:28 IST

ஊட்டச்சத்து நிறைந்த உணவு செய்முறையில் நாம் அடுத்து பார்க்கப் போகும் உணவு வாழைப்பழ பேன்கேக். இது காலை வேளையில் எளிதாகத் தயாரிக்க கூடிய உணவுகளில் ஒன்றாகும். இட்லி, தோசை சுடுவதற்கான மாவு தயாரிப்பது போல தான் இதன் செய்முறையும், வீட்டில் வழக்கமான பேன்கேக் செய்வதற்கு பதிலாக வாழைப்பழத்தை வைத்து எப்படி பேன்கேக் செய்வது என பார்க்கப் போகிறோம்.

சிலர் வாழைப்பழம் அதிகமாக பழுத்து கொழகொழவென மாறிவிட்டால் அதைச் சாப்பிட மாட்டார்கள். எனவே அந்த பழத்தை வைத்து கூட பேன்கேக் செய்து அனைவருக்கும் கொடுக்கலாம்.

healthy banana pancake

வாழைப்பழ பேன்கேக் செய்யத் தேவையானவை

  • முட்டை
  • வாழைப்பழம்
  • பால்
  • சர்க்கரை
  • மைதா
  • பேக்கிங் சோடா
  • பேக்கிங் பவுடர்
  • தேன்

மேலும் படிங்க 20 ஸ்டெப் தான்! வீட்டிலேயே சுவையான பீட்சா ரெடி

வாழைப்பழ பேன்கேக் செய்முறை

  • ஒரு பெரிய பாத்திரத்தில் கால் லிட்டர் பால் ஊற்றி அதில் 15 ஸ்பூன் சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரையை அப்படியே சேர்த்தால் அது கரைவதற்கு நேரம் எடுக்கும். எனவே மிக்ஸியில் போட்டு பொடிதாக்கி பாலில் சர்க்கரையை சேர்த்து கரைக்கவும்.
  • இதன் பிறகு மூன்று முட்டையை உடைத்து பாலில் நேரடியாகச் சேர்க்கவும். இவற்றை விஸ்க் வைத்து நன்கு பீட் செய்து மிக்ஸிங் செய்யவும்.
  • அடுத்ததாக மூன்று வாழைப்பழத்தை பொடிதாக நறுக்கி டீஸ்பூனை வைத்து நசுக்கி அதை பாலுடன் சேர்க்கவும். தொடர்ந்து இரண்டு நிமிடங்களுக்கு விஸ்க் வைத்து பீட் செய்யவும்.
  • இதையடுத்து கால் கிலோ மைதா மற்றும் தலா ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் போட்டு அனைத்தையும் நன்றாக மிக்ஸ் செய்யவும்.
  • தற்போது பேனில் வெண்ணெய் தடவி அது சூடான பிறகு தோசை மாவு ஊற்றுவது போல மிக்ஸ் செய்து வைத்திருக்கும் வாழைப்பழ பேன்கேக் மாவை ஊற்றவும்.
  • அதிகபட்சமாக வாழைப்பழ பேன் தயாராக இரண்டு நிமிடங்கள் வரை ஆகும். 
  • இதே போல மீண்டும் வாழைப்பழ பேன்கேக் மாவை பேனில் ஊற்றும் போதும் ஊத்தாப்பத்தில் வெங்காயம் தூவுவது போல உலர் பழங்கள், ஆப்பிள், அன்னாசி பழம் ஆகியவற்றை பொடிதாக நறுக்கி தூவலாம். இது வாழைப்பழ பேன்கேக்-ற்கு கூடுதல் சுவையை தரும்.
  • இறுதியாக வாழைப்பழ பேன்கேக் மீது தேன் ஊற்றினால் பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும்.
  • நீங்கள் விரும்பினால் முட்டை சேர்க்காமல் கூடுதலாக ஒரு வாழைப்பழத்தை சேர்த்து மாவை தயாரிக்கலாம்.
  • இது வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும். தினமும் இட்லி, தோசை, பொங்கல் என கொடுப்பதற்கு பதிலாக ஒரு நாள் வாழைப்பழ பேன்கேக் மாற்றி கொடுக்கலாம்.

மேலும் படிங்க ஆந்திரா ஃபேமஸ் ஸ்நாக் புனுகுலு செய்முறை

இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com