
குழந்தை வளர்ப்பு என்பது மிகுந்த நுட்பமான காரியம் என்பதை மறுக்க முடியாது. சரியான முறையில் குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்துவது சவாலான விஷயம். இதனை எளிமைப்படுத்தும் வகையில் நீங்கள் சில வழிமுறைகளை பின்பற்றலாம். அவற்றை தற்போது காண்போம்.
ஒன்றாக வாசிக்கும் பழக்கம்:
தூங்குவதற்கு முன் கதை சொல்வது என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. அது குழந்தைகளின் வார்த்தைகள் கற்றுக் கொள்ளும் திறனை மேம்படுத்தி, அவர்களின் கற்பனை திறனை தூண்டுகிறது. இரவு நேரத்தில் பத்து நிமிடங்கள் ஒன்றாக சேர்ந்து வாசித்தாலும் கூட அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையிலான உறவையும் வலுப்படுத்துகிறது.
நாள் முழுவதும் நடந்த நிகழ்வுகள் குறித்து சிறிது நேரம் பேசுவது, குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளவும், நினைவாற்றலை மேம்படுத்தவும், தகவல் தொடர்பு திறனை வளர்க்கவும் உதவுகிறது. இது அவர்களின் மன மற்றும் உணர்ச்சி ரீதியான வளர்ச்சிக்கு உதவுகிறது.

மேலும் படிக்க: Postpartum depression: பிரசவத்திற்கு பின்னர் பெண்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு; தடுப்பதற்கான எளிய வழிமுறைகள்
மூளை சீராக இயங்குவதற்கு நாம் ஒரே நேரத்தில் விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். அதாவது, தினமும் ஒரே நேரத்தில் தூங்கச் செல்வது குழந்தைகளின் ஆற்றலை சீராக பராமரிக்க உதவுகிறது. மேலும் இது, அவர்கள் சிறப்பாக கவனம் செலுத்தவும், தகவல்களை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
மேலும் படிக்க: Pregnant women health tips: நோய் தொற்று அபாயத்தை தடுக்க கர்ப்பிணி பெண்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்
தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது, மென்மையான இசையை கேட்பது அல்லது சில எளிய உடற்பயிற்சிகள் செய்வது போன்றவை மூளைக்கு, ஓய்வுக்கான நேரத்தை குறிப்பிடுகின்றன. இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. நல்ல தூக்கம் என்பது சிறந்த நினைவாற்றல் மற்றும் கற்றல் திறனுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளை அவர்களுக்கான கதைகளை உருவாக்க சொல்வது, அவர்களின் படைப்புத்திறன், சிக்கல் தீர்க்கும் திறன் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கிறது.

ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் போன்ற சாதனங்களிலிருந்து வரும் நீல ஒளி, மெலடோனின் என்ற தூக்கத்தை ஏற்படுத்தும் ஹார்மோனின் உற்பத்தியை தாமதப்படுத்துகிறது. இதனால், குழந்தைகளுக்கு ஆழ்ந்த தூக்கம் கிடைப்பது கடினமாகிறது. தூங்குவதற்கு முன் இவற்றை பயன்படுத்தாமல் இருப்பது, சிறந்த கவனம் மற்றும் பள்ளிப் படிப்பில் சிறப்பான செயல்திறனை உருவாக்குகின்றன.
"நான் உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்" அல்லது "இன்று நீ மிகவும் கடினமாக உழைத்தாய்" போன்ற வார்த்தைகளுடன் நாளை முடிப்பது, குழந்தைகளின் தன்னம்பிக்கையையும், மன உறுதியையும் வளர்க்கிறது. இது கல்வியில் வெற்றி பெறுவதற்கான முக்கிய அடித்தளமாகும்.
சிறப்பான இரவு நேர பழக்கங்கள், நல்ல தூக்கத்தை மட்டுமல்ல, பிரகாசமான மற்றும் வலிமையான குழந்தைகளையும் உருவாக்குகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com