என்ன தான் மூன்று வேளை ருசியான உணவு சாப்பிட்டாலும் மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் கடித்து சாப்பிடும் தின்பண்டத்தின் ருசியே தனித்துவமானது. வடை, போண்டா, பஜ்ஜி, முறுக்கு என பல தின்பண்டங்கள் கிடைத்தாலும் ரிங் முறுக்கு போன்ற நொறுக்குத் தீனியுடன் டீ குடிக்கும் போது வாயில் சுவைக்ககூடிய காரம்... அடடே வார்த்தைகளால் விவரிக்க முடியாத சுவையாகும். ரிங் முறுக்கு கர்நாடகாவில் கொடுபலே என்று அழைக்கப்படுகிறது. காற்று புகாத டப்பாவில் 15 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். கார சாரமா மொறுமொறுப்பாக இருக்கும். வெளியே இதை வாங்க நினைக்கும் போது புதிதாக தயாரித்ததா அல்லது நல்ல எண்ணெய்-ல் சுட்டதா போன்ற சந்தேகங்கள் வரும். எனவே வீட்டிலேயே கொடுபலே செய்து பார்ப்போம்.
கொடுபலே செய்யத் தேவையானவை
- அரிசி மாவு
- மைதா
- சிரோட்டி ரவை
- கடலெண்ணெய்
- துருவிய தேங்காய்
- சீரகம்
- பொட்டுக் கடலை
- ஓமம்
- உள்ளூர் மிளகாய்
- பைடகி மிளகாய்
- தண்ணீர்
- பெருங்காயத் தூள்
கொடுபலே செய்முறை
- பெரிய பாத்திரத்தில் 200 கிராம் அரிசி மாவுடன் மூன்று ஸ்பூன் மைதா சேர்க்கவும். அடுத்ததாக பேனில் எட்டு ஸ்பூன் சிரோட்டி ரவை போட்டு எண்ணெய் ஊற்றாமல் வறுக்கவும். ரவையின் நிறம் மாறாமல் நறுமணம் வந்தவுடன் அடுப்பை நிறுத்திவிட்டு அதை மாவுடன் சேர்த்து கலக்கவும்.
- இப்போது அரை குழிக்கரண்டு அளவிற்கு சூடுபடுத்திய கடலெண்ணெய்யை மாவுடன் சேருங்கள். தேவையான அளவு உப்பு போடுங்கள்.
- சின்ன ஜாரில் அரை மூடி துருவிய தேங்காய், அரை டீஸ்பூன் சீரகம், ஐந்து ஸ்பூன் பொட்டுக்கடலை, காரத்திற்காக நான்கு உள்ளூர் மிளகாய், நிறத்திற்காக நான்கு பைடகி மிளகாய் மற்றும் 50 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல அரைக்கவும்.
- இதை மாவில் போட்டு கால் டீஸ்பூன் ஓமம், அரை டீஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
- மாவை ஊறவிட்டால் புளித்துவிடும். எனவே உடனடியாக கோலி சைஸிற்கு உருண்டை பிடித்து உருட்டி ரிங் வடிவத்திற்கு மாற்றி வறுக்க தொடங்கலாம்.
- தண்ணீர் அதிகமாக ஊற்றி மாவு புளித்துவிட்டால் வறுக்கும் போது எண்ணெய் அதிகமாக இழுக்கும். மேலும் ரிங் முறுக்கு மொறுமொறுப்பாக வராது.
- நீங்கள் உருட்டிய மாவு சப்பாத்தி மாவின் பதத்திற்கு வர வேண்டும்.
- மிதமான சூட்டில் 7-8 நிமிடங்கள் இந்த ரிங் முறுக்கை சமோசா போல வறுக்கவும்.
- தீயை அதிகமாக வைத்து வறுக்கும் போது வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே சரியே வேகாமலும் இருக்கும். இந்த தவறை செய்யாதீர்கள்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation