herzindagi
kunafa ingredients

ரம்ஜான் ஸ்பெஷல் குனாஃபா ஸ்வீட் செஞ்சு பாருங்க! மகிழ்ச்சி இரட்டிப்பாகும்

ரம்ஜான் கொண்டாட்டம் பிரியாணியோடு முடிந்துவிடுவதில்லை. பல ஸ்பெஷல் உணவுகள் இருக்கின்றன. நீங்கள் இந்த ரம்ஜானுக்கு தவறவிடக்கூடாத இனிப்பு என்றால் அது அரபியன் ஸ்விட் குனாஃபா தான்.
Editorial
Updated:- 2024-04-10, 09:08 IST

குனாஃபா ஸ்வீட், ரம்ஜான் ஸ்பெஷல் குனாஃபா, arab ரமலான் பண்டிகை கொண்டாட்டத்தில் சிக்கன் பிரியாணி மற்றும் ஸ்பெஷல் ஸ்வீட் இருந்தால் யாருக்கு தான் பிடிக்காது. ரமலான் பண்டிகையின் போது பல அரபு நாடுகளில் குனாஃபா ஸ்வீட் தயாரிக்கப்படுகிறது. குனாஃபா துருக்கியின் பாரம்பரிய உணவாக இருந்தது. ஆனால் தற்போது அரபு நாட்டு இனிப்பாக மாறிவிட்டது. அந்த வகையில் பலருக்கும் பிடித்தமான குனாஃபா எப்படி செய்வது என பார்க்கலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே குனாஃபா தயாரிக்க முடியும்.

arab dessert kunafa

குனாஃபா செய்யத் தேவையானவை

  • மைதா மாவு
  • சோள மாவு
  • எண்ணெய்
  • உப்பு
  • தண்ணீர்
  • பால்
  • ஏலக்காய்
  • எலுமிச்சை
  • முந்திரி
  • பாதாம்

மேலும் படிங்க உகாதி ஸ்பெஷல் ஆந்திரா பூர்ணம் பூரேலு ருசிக்கலாமா ?

குனாஃபா ஸ்வீட் செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் 125 கிராம் மைதா மாவு சேர்த்துக் கொள்ளவும். இதனுடை அரை கப் சோள மாவு போடுங்கள்.
  • இதனுடன் ஐந்து ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் மற்றும் கால் ஸ்பூன் அளவிற்கு உப்பு சேர்க்கவும்.
  • இதில் கொஞ்சம் கொஞ்மாக தண்ணீர் சேர்த்து கலக்கவும். ரொம்ப தண்ணியாகவும் இருக்க கூடாது அதே நேரம் மிக கெட்டியாகவும் இருக்க கூடாது.
  • எந்தவித கட்டியும் இல்லாமல் மாவை ஸ்மூத்தாக கரைக்கவும். இதை ஒரு நிமிடத்திற்கு நன்றாக கலந்து வைக்கவும்.
  • இதை வேக வைக்க வேண்டும். ஒரு பேனில் மருதாணி போடுவது போல முறுக்கு சுடவும். இது வேகமாக வெந்து விடும். 30 விநாடிகளில் இதை பேனில் இருந்து எடுத்து விடுங்கள்.
  • பார்ப்பதற்கு நூடுல்ஸ் போலவும் மென்மையாகவும் தெரியும். இதற்கு வடிவம் தேவையில்லை. நாம் வெட்டி தான் பயன்படுத்தபோகிறோம். தேவையான அளவுக்கு நீங்கள் வேக வைத்து எடுக்கவும். நீளமாக இருப்பதால் சின்னதாக வெட்டவும்.
  • பேனில் இரண்டு ஸ்பூன் வெண்ணெய் அளவிற்கு நன்றாக தடவி தனியாக வைக்கவும்.
  • 80 கிராம் வெண்ணெய்யை உருக்கி குனாஃபா மீது ஊற்றவும். நன்றாக மிக்ஸ் செய்யவும்.
  • அடுத்ததாக உள்ளே வைக்கும் கிரீம் லேயரை தயாரிக்க வேண்டும். இதற்கு ஒரு பேனில் பத்து ஸ்பூன் சோள மாவு, ஐந்து ஸ்பூன் சர்க்கரை, ஒன்றரை கப் பால் சேர்க்கவும். இப்போது அடுப்பை ஆன் செய்து இதை கொஞ்சம் கெட்டியாக மாற்றவும்.
  • இதனுடன் மூன்று ஸ்பூன் வெண்ணெய் மற்றும் வாசனைக்காக ஏலக்காய் தூள் சேர்க்கவும். அடுப்பை ஆப் செய்து கொஞ்ச நேரத்திற்கு ஆற விடுங்கள்.
  • மற்றொரு பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரைக்கு ஒரு கப் தண்ணீர் ஊற்றி சர்க்கரை பாகு தயாரிக்கவும். கம்பி பதம் வரும் முன்பாக கொஞ்சம் ஏலக்காய் தூள், பத்து சொட்டு எலுமிச்சை சொட்டு ஊற்றவும்.
  • வெட்டி வைத்த குனாஃபாவில் பாதியை வெண்ணெய் தடவிய பாத்திரத்தில் போட்டு நன்கு அழுத்தவும். மிடில் லேயரில் கிரீம் சேர்க்கவும். மீதி பாதியை கிரீம் மேலே போட்டு அழுத்தி வைக்கவும்.
  • குறைந்த தீயில் வைத்து வேக வைக்கவும். ஒரு பாதி வெந்து எடுப்பதற்கு ஏழு நிமிடங்கள் ஆகும். ஒரு பாதி வெந்த பிறகு தோசை போல திருப்பி போட்டு வேக வைக்கவும். ஓரங்களிலும் தீ காட்டி சமமாக வேக வைக்கவும்.
  • திருப்பி போடும் போது இரண்டு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
  • அடுப்பை ஆப் செய்து வெளியே எடுத்த பிறகு சர்க்கரை பாகு தேவையான அளவு சேர்க்கவும். மேலே பொடிதாக நறுக்கிய முந்திரி, பாதாம் பருப்பு போடுங்கள். மிகவும் ருசியாக இருக்கும்.
Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com