Skin Glow Drinks : இயற்கையான சரும பொலிவு பெற இந்த 3 பானங்களை முயற்சி செய்யலாமே!

உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை பெற வேண்டுமா? இப்பதிவில் பகிரப்பட்டுள்ள ஜூஸ் வகைகளை முயற்சி செய்து பாருங்கள்...

 
juice recipes for natural skin glow

நமது சருமம் நம் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கிறது. இந்நிலையில் அழகான சருமத்தை பெற உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆயிரக்கணக்கில் செலவு செய்து வாங்கினாலும் அழகு சாதன பொருட்களால் தற்காலிக பலன்களை மட்டுமே கொடுக்க முடியும். ஆனால் உங்களுக்கு நிரந்தர பலன்கள் வேண்டும் எனில் நிச்சயமாக உங்களை உள்ளிருந்து அழகாக வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்குவதற்கு டீடாக்ஸ் பானங்களை எடுத்துக் கொள்ளலாம். இது உங்களுக்கு இயற்கையான சரும பொலிவை கொடுக்கும். உங்கள் சரும அழகை மேம்படுத்தக்கூடிய மூன்று அற்புதமான பானங்களை இன்று இப்பதிவில் பார்க்கப் போகிறோம். இதற்கான செய்முறையை கற்றறிந்து பயன்பெறுங்கள்.

கேரட் பீட்ரூட் ஜூஸ்

ஆரோக்கியமான, பளபளப்பான மற்றும் முகப்பரு இல்லாத தெளிவான சருமம் பெற உதவும் கேரட் பீட்ரூட் ஜூஸ்.

carrot beetroot juice for skin glow

தேவையான பொருட்கள்

  • பீட்ரூட் - 1/2
  • கேரட் - 4
  • இஞ்சி - சிறிய துண்டு
  • தண்ணீர் - ½ கப்
  • எலுமிச்சை - ½

செய்முறை

  • நறுக்கிய கேரட் மற்றும் பீட்ரூட்டை ஒரு மிக்சர் ஜாரில் சேர்க்கவும்.
  • இதனுடன் இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • இதனை வடிகட்டி ஒரு கிளாஸில் ஊற்றவும். நீங்கள் விரும்பினால் இதில் சிறிதளவு கருப்பு மிளகு பொடி சேர்த்து காலையில் குடிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: 90's கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த பாதாம் கீர் ரெசிபி

வெள்ளரிக்காய் டீடாக்ஸ் தண்ணீர்

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சூரிய கதிர்களின் தாக்கம் மற்றும் முகப்பருக்களை குறைக்க உதவும் வெள்ளரிக்காய் ஜூஸ்.

cucumber juice for skin glow

தேவையான பொருட்கள்

  • வெள்ளரிக்காய் 1
  • புதினா 10-12
  • தண்ணீர் - 4 கப்
  • எலுமிச்சை - 2

செய்முறை

  • முதலில் வெள்ளரிக்காயை தோல் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • எலுமிச்சையின் கொட்டைகளை நீக்கிய பின் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு பெரிய கண்ணாடி ஜாடியில் வெள்ளரிக்காய், எலுமிச்சை மற்றும் புதினா இலைகளை சேர்க்கவும்.
  • இந்த டீடாக்ஸ் தண்ணீரை நாள் முழுவதும் குடிக்கலாம். இது உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

கற்றாழை ஜூஸ்

கொலாஜன் உற்பத்தியை விரைவு படுத்தி உங்கள் சருமத்திற்கு இயற்கை பொழிவு தரும் கற்றாழை ஜூஸ்.

aloevera juice for skin glow

தேவையான பொருட்கள்

  • கற்றாழை - 1 இலை
  • எலுமிச்சை ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் - 1 கப்

செய்முறை

  • ஒரு ஸ்பூனில் உதவியுடன் கற்றாழை இலையில் உள்ள ஜல்லை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு மிக்ஸர் ஜாரில் பிரஷ்ஷாக எடுக்கப்பட்ட கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து அவ்வப்போது தண்ணீர் விட்டு நன்கு அரைக்கவும்.
  • இதனை வடிகட்டி தினமும் காலையில் குடித்து வர நல்ல மாற்றங்களை பார்க்க முடியும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP