Pav Bhaji Recipe: இனி வீட்டிலேயே மும்பை ஸ்டைல் பாவ் பாஜி செய்து ருசியுங்கள் !

சுவையான பாவ் பாஜி சாப்பிட மும்பை செல்ல வேண்டிய அவசியம் இல்லை, வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து பாவ் பாஜி செய்ய கற்றுக் கொள்வோம்…

pav bhaji recipe home made

மும்பை தெருவோர உணவுகளில் மிகவும் பிரபலமானது இந்த பாவ் பாஜி. சமீப காலமாக பிரபலமாக உள்ள சில இனிப்பகங்களிலும் பாவ் பாஜி பரிமாறப்படுகிறது. இதில் பாவ் என்றால் ரொட்டி அல்லது பன் என்று பொருள். இதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் மசித்த காய்கறி கிரேவியை பாஜி என்று அழைக்கிறார்கள்.

வெண்ணெயில் சுட்டெடுத்த பாவ் பன்களை பாஜியில் புரட்டி எடுத்து வாயில் போட்டால், பல மணி நேரங்களுக்கு அதன் சுவை நாவை விட்டு நீங்காது. அன்றைய நாள் முழுவதன் அதன் சுவை மற்றும் மணம் உங்களை நிறைவாக வைத்திருக்கும். இத்தகைய சிறப்பம்சங்கள் நிறைந்த மும்பை ஸ்டைல் பாவ் பாஜி ரெசிபியை படித்தறிந்து நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்

pav bun

  • உருளைக்கிழங்கு - 3
  • காலிஃபிளவர் - 1 கப்
  • பீட்ரூட் - 1 சிறியது
  • பீன்ஸ் - 6
  • கேரட் - 1
  • பட்டாணி - ½ கப்
  • வெங்காயம் - 1
  • குடமிளகாய் - 1 கப்
  • தக்காளி - 4
  • பச்சை மிளகாய் - 3
  • இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
  • கரம் மசாலா தூள் - 2 டீஸ்பூன்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • சர்க்கரை - 2 டீஸ்பூன்
  • கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
  • வெண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

செய்முறை

pav bhaji recipe mumbai style

  • முதலில் தேவையான காய்கறிகள் அனைத்தையும் தோல் நீக்கி, நறுக்கி தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • இப்போது ஒரு பிரஷர் குக்கரில் உருளைக்கிழங்கு, காலிபிளவர், பீன்ஸ், பீட்ரூட் மற்றும் கேரட் சேர்த்து 5-6 விசில் விட்டு வேக வைத்து இறக்கவும். பிரஷர் தானாக அடங்கிய பிறகு, ஒரு மத்தை வைத்து காய்கறிகளை நன்கு மசித்து கொள்ளவும்.
  • அடுத்ததாக ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து உருக்கவும். இது சீரகத்தை சேர்த்து பொரிய விடவும்
  • இதனுடன் வெங்காயம் மற்றும் குடமிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • இப்போது மசாலா பொடிக மற்றும் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு கிளறவும்.
  • இதற்கு தேவையான அளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து தக்காளி முழுமையாக வேகும் வரை சமைக்கவும்.
  • இதனுடன் பட்டாணி மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • கொதிக்கும் மசாலா கலவையில் மசித்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து கலக்கவும்.
  • மூடி போட்டு மூடி, குறைந்த தீயில் 10-15 நிமிடங்களுக்கு சுண்ட விடவும். நீங்கள் விரும்பினால் இதை ஒரு தோசை கல்லில் வெண்ணெய் உடன் சேர்த்தும் கெட்டியாகும் வரை சமைக்கலாம்.
  • இறுதியாக எலுமிச்சை சாறு, பிழிந்து கொத்தமல்லி இலைகள் தூவினால் பாஜி தயார். இதை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வைக்கவும்.
  • வெண்ணெயில் சுட்டு எடுத்த பன்களுடன் இந்த பாஜியை பரிமாறலாம்.

மும்பையோட ஸ்பெஷல் பாவ் பாஜி ரெசிபியை நீங்களும் வீட்டில் செய்து உண்டு மகிழுங்கள்

இந்த பதிவும் உதவலாம்: பருப்பு வேண்டாம், ஒரு கேரட் இருந்தாலே போதும் அட்டகாசமான டிபன் சாம்பார் செய்திடலாம்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP